வாரி வாரி வழங்கப்போகும் சுக்கிரன்.. இந்த 5 ராசிகளுக்கு பணத்திற்கு பஞ்சமே வராது..!

zodiac signs

வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மிக முக்கியமான கிரகம். இந்த கிரகம் நல்ல நிலையில் சஞ்சரித்தால், மக்களின் வாழ்க்கை மாறும். குறிப்பாக, அவர்கள் நிதி ரீதியாக நன்றாக இருப்பார்கள். செல்வம் அதிகரிக்கும். தற்போது சுக்கிரன் கடக ராசியில் நுழைந்துள்ளார். இந்த பெயச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கும். எனவே, அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்..


மேஷம்

சுக்கிரனின் சஞ்சாரம் மேஷ ராசிக்கு மிகவும் நன்மை பயக்கும். சுக்கிரனின் மாற்றத்தால் மேஷ ராசிக்கு பண ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் ஒரு பெரிய விஷயமும் சாத்தியமாகும். உடல்நலப் பிரச்சனைகள் நீங்கலாம். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கடகம்

சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைவார், இது அவர்களின் அதிர்ஷ்டத்தை மேம்படுத்தும். அவர்கள் அனைத்திலும் வெற்றியை அடைய முடியும். தேங்கி நிற்கும் பணம் திரும்பலாம். வங்கி இருப்பு அதிகரிக்கும். குடும்பத்துடன் விடுமுறைக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் மாற்றம் நல்ல பலன்களைத் தரும். அவர்கள் வேலையில் தங்கள் இலக்குகளை அடைய முடியும். வேலையில் பதவி உயர்வு பெறவும் வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையேயான உறவுகள் மேம்படும். குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அவை தீர்க்கப்படும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அந்தப் பணம் மீண்டும் உங்களை வந்தடையும் வாய்ப்பு உள்ளது.

துலாம்

சுக்கிரன் பெயர்ச்சி, துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு பணப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். புதிய காதல் உறவுகள் உருவாகும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல நேரம்.

கும்பம்

சுக்கிரனின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். கும்ப ராசிக்காரர்கள் சொத்துக்களைப் பெறுவார்கள். முன்னோர்களின் சொத்தில் பங்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கடன்களை அடைக்க முடியும். அரசியல் தலைவர்கள் பெரிய பதவியைப் பெற வாய்ப்புள்ளது. அவர்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவார்கள்.

Read More : சதுர்கிரஹி யோகம் : இந்த 5 ராசிகளுக்கு பெரும் ஜாக்பாட்! பணம், புகழ் பெருகும்.. நினைத்தது நடக்கும்!

RUPA

Next Post

மணிக்கு 472 கி.மீ.. உலகின் அதிவேக எலக்ட்ரிக் கார் இதுதான்..!

Sat Aug 30 , 2025
சீன கார் தயாரிப்பு நிறுவனமான BYD, தனது சொகுசு பிராண்டான Yangwang காரின் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளது. Yangwang Y9 டிராக் பதிப்பு, ஜெர்மனியில் உள்ள Papenburg டிராக் கார், மணிக்கு 472.41 கிமீ வேகத்தில் உலகின் அதிவேக மின்சார வாகனமாக மாறியுள்ளது. இதற்கு முன்பு வரை இந்த சாதனையை Rimac Nevera R கார் வைத்திருந்தது, இது மணிக்கு 391.94 கிமீ வேகத்தைப் பதிவு செய்தது. இந்த […]
BYD Yangwang U9 1

You May Like