வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் தலைநகர் டாக்கா மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.. சில இடங்களில் தீ வைப்பு சம்பவஙள் நடந்ததையும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்ததையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வங்கதேசத்தில் புதிய வன்முறைகள்
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் துறைகளுக்கு கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வங்கதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறப்பு நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பாக, தற்போது கலைக்கப்பட்ட ஹசினாவின் அவாமி லீக் கட்சி, இரண்டு நாள் பொது முடக்கம் (shutdown) அறிவித்திருந்தது.
இதன் பின்னணியில், ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள், ஒரு காவல் நிலைய வளாகத்தில் உள்ள பழைய வாகனக் குப்பை மேட்டில் தீ வைத்தனர்.. இடைக்கால அரசுத் தலைவர் பேராசிரியர் முகமது யூனஸின் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஒருவரின் இல்லம் முன்பு வெடிகுண்டு வீச தாக்குதல் நடத்தினர்..
தலைநகர் டாக்காவின் பல இடங்களிலும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.. இந்தச் சம்பவங்களின் காரணமாக, தலைநகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, கண்காணிப்பு தொடர்கிறது..
டாக்கா வன்முறை: ‘கண்டதும் சுட’ உத்தரவு
டாக்காவில் பதற்றம் அதிகரித்து வருவதால், டாக்கா காவல்துறை, வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்துள்ளது. மனிதத்தன்மைக்கு எதிரான குற்றச்சாட்டில், 78 வயதான ஷேக் ஹசினாவுக்கு தூக்கு தண்டனை கோரி அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். கமிஷனர் எஸ்.எம். சஜ்ஜாத் அலி பேசிய போது “ பேருந்துகளை எரிப்பவர்கள் அல்லது கொல்லும் நோக்கத்துடன் குண்டு வீசுவோர் உடனடியாக சுடப்பட வேண்டும் என வயர்லெஸ் மூலம் அறிவித்தேன். இதற்கான அதிகாரம் எங்கள் சட்டத்தில் தெளிவாக உள்ளது.”
டாக்காவில் தொடர்ச்சியான தாக்குதல்கள்
நவம்பர் 10 முதல், டாக்கா நகரில் அதிகாலை நேரங்களில் பல மறைமுகத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் முக்கியமானவை:
யூனஸ் தொடங்கிய கிராமீன் வங்கி தலைமையக நுழைவாயிலில் கச்சா குண்டு வெடிப்புகள், வங்கியின் பல கிளைகளில் பெட்ரோல் குண்டு மற்றும் தீவைப்புத் தாக்குதல்கள், கடந்த வாரம் பல பேருந்துகள் தீ வைக்கப்பட்டன; அவற்றில் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் தீவில் உயிரிழந்தார்
வழக்கு நிலை
தற்போது இந்தியாவில் உள்ள ஷேக் ஹசினா, அவரின் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுச்சமான் கான் கமால் ஆகியோர் வழக்குகளில் விசாரிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது குற்றவாளி, முன்னாள் போலீஸ் தலைவர் அப்துல்லா அல் மமூன், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அரசு சாட்சியாக (approver) மாறியுள்ளார். இது தண்டனையில் தளர்வு பெறும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஹசீனாவுக்கான மிக உயர்ந்த தண்டனையை கோரியுள்ளோம். கடந்த ஆண்டின் வன்முறை சாலைப் போராட்டங்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக குற்றவாளிகளின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டுமென கேட்டுள்ளோம்,” என்று ICT-BD வழக்கறிஞர் காஜி எம்.ஹெச். தமீம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி வங்கதேச சட்டத்தின் படி, தீர்ப்பு வெளியான 30 நாட்களுக்குள் சரணடையவில்லையெனில் அல்லது கைது செய்யப்படாவிட்டால், ஹசீனாவுக்கு உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு பிரிவில் மேல்முறையீடு செய்ய உரிமை இல்லை.
வழக்கறிஞர்கள் மேலும் தெரிவித்ததாவது: தீர்ப்பு அரசு ஒளிபரப்புக் கழகம் BTV-யில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதோடு, டாக்காவின் பல இடங்களில் பெரிய திரைகளில் காட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.
தீர்ப்பின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும்; அதற்கான இறுதி ஒப்புதல் விசாரணை நீதிமன்றத்தால் வழங்கப்படும். கூடுதலாக, தீர்ப்பு ICT-BD-யின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்படும். ஷேக் ஹசீனா குற்றச்சாட்டுகளை நிராகரித்து, கட்சி உறுப்பினர்களை கவலைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்
ஆவாமி லீக் ஃபேஸ்புக் பக்கத்தில் இரவோடு இரவாக பதிவேற்றப்பட்ட ஆடியோ செய்தியில், ஹசீனா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். மேலும்,
“இத்தகைய தாக்குதல்களையும் வழக்குகளையும் நாம் பலமுறை பார்த்துள்ளோம்; இது நேரத்தின் விஷயம் மட்டுமே. நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்று கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இடைநிலை அரசின் உள்துறை ஆலோசகர், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கிர் ஆலம்ப் சௌத்ரி, “தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது நிறைவேற்றப்படும்,” என்று கூறினார்.
ஹசீனா, அவரது மூத்த அமைச்சர்கள் மற்றும் பல ஆவாமி லீக் தலைவர்கள் கொலை, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை வெளியாக உள்ள தீர்ப்பு, கடந்த ஆண்டு நிகழ்ந்த ஜூலை எழுச்சி சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து மனிதநேயத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பற்றியது.
கொலைகள், கொலை முயற்சிகள், சித்திரவதை, ஆயுதமற்ற மாணவர் போராட்டக்காரர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்துதல், உயிர்க்காயம் ஏற்படுத்தும் ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் பயன்படுத்த உத்தரவிடுதல் ரங்க்பூர் மற்றும் டாக்காவிலுள்ள குறிப்பிட்ட கொலைச் சம்பவங்கள் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது..



