இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த உள்ளூர் மொழித் தொழில்நுட்பத் தளமாகவும், Dailyhunt, Josh, Magzter மற்றும் NexVerse.ai ஆகிய தளங்களின் தாய் நிறுவனமாகவும் விளங்கும் VerSe Innovation, இன்று திரு. P. R. ரமேஷை தனது நிர்வாகக் குழுவின் (Board) சுயாதீன இயக்குநராக நியமித்துள்ளதாக அறிவித்தது. நிறுவனம் தனது அடுத்தகட்ட நிறுவன மற்றும் உத்திசார் வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்லும் நிலையில், அவர் தணிக்கைக் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்று, நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவார்.
திரு. ரமேஷ், நிதி மேற்பார்வை, நிறுவன நிர்வாகம் (Corporate Governance), ஒழுங்குமுறை ஆலோசனைகள் மற்றும் நிர்வாகக் குழுத் தலைமைத்துவம் ஆகிய துறைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஒரு பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) ஆவார்.
இவர் Deloitte India-வின் முன்னாள் தலைவராகவும், Deloitte Global Board-இன் முன்னாள் உறுப்பினராகவும் பணியாற்றியவர். தனது தொழில் வாழ்க்கையின் போக்கில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நிர்வாகம், இடர் மேலாண்மை, நிதி அறிக்கையிடல் தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் ஆகிய குறித்து இவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இவர் தற்போது Air India, Cipla, Nestlé India, Larsen & Toubro, Crompton Greaves, ITC Hotels, Cyient, Tejas Networks மற்றும் Housing Development Finance Corporation உள்ளிட்ட பல முக்கியப் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார் அல்லது பணியாற்றியுள்ளார்.
2022–23 ஆம் ஆண்டிற்கான “சிறந்த சுயாதீன இயக்குநர்” (Best Independent Director) விருதை, Asian Centre for Corporate Governance & Sustainability அமைப்பிடமிருந்து இவர் பெற்றுள்ளார்.
தொழில்முறைச் சேவைகளில் தனது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் ஒழுங்குமுறை மற்றும் கொள்கை சார்ந்த விவாதங்களை வடிவமைப்பதிலும் திரு. ரமேஷ் தீவிரப் பங்காற்றியுள்ளார். SEBI, RBI மற்றும் IRDA ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய முக்கியக் குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களில் இவர் பணியாற்றியுள்ளார்; இதன் மூலம் பல்வேறு துறைகளில் நிர்வாக மற்றும் நிதித் தரநிலைகளின் பரிணாம வளர்ச்சிக்கு இவர் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
VerSe Innovation-இன் இணை நிறுவனரான திரு. உமாங் பேடி இதுகுறித்து பேசிய போது : “காலத்தின் சோதனைகளைத் தாங்கி நிற்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்கு, வலுவான நிர்வாகமும் நிதி ஒழுக்கமும் அடிப்படைத் தூண்களாக விளங்குகின்றன. நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதல், ஒழுங்குமுறைச் சட்டகங்கள் மற்றும் உலகளாவிய தணிக்கைத் தலைமைத்துவம் ஆகிய துறைகளில் ஈடுஇணையற்ற அனுபவத்தைத் திரு. P.R. ரமேஷ் கொண்டுள்ளார்.

VerSe நிறுவனம் தொடர்ந்து முதிர்ச்சியடைந்து, நிலையான வளர்ச்சியின் மீது தனது கவனத்தைக் கூர்மைப்படுத்தி வரும் இத்தருணத்தில், அவரது தொலைநோக்குப் பார்வை எங்கள் நிர்வாகத் தரநிலைகளை வலுப்படுத்துவதிலும், பங்குதாரர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதிலும் மிக முக்கியப் பங்காற்றும்,” என்று கூறினார்.
திரு. பி. ஆர். ரமேஷ் பேசிய போது “வெர்சே நிறுவனம் இந்தியாவின் டிஜிட்டல் உலகில் கணிசமான அளவிலான ஒரு வணிகத்தை உருவாக்கியுள்ளது. அந்த அளவிற்கு, ஆளுகை அமைப்புகள், நிதிக் கட்டுப்பாடுகள் மற்றும் இடர் மேற்பார்வை ஆகியவை வளர்ச்சிக்கு ஈடுகொடுப்பதை உறுதிசெய்யும் பொறுப்பும் வருகிறது. வலுவான நிறுவனங்கள் புதுமையின் மீது மட்டுமல்ல, ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மீதும் கட்டமைக்கப்படுகின்றன. இந்தக் கொள்கைகளை மேலும் நிலைநிறுத்தவும், நீடித்த, பொறுப்பான வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு ஆளுகைக் கட்டமைப்பை வடிவமைக்கவும், இயக்குநர்கள் குழு மற்றும் நிர்வாகக் குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்”. என்று தெரிவித்தார்.
வெர்சே இன்னோவேஷன் நிறுவனத்தில், திரு. ரமேஷ் தணிக்கைக் குழுவிற்குத் தலைமை தாங்குவார்.. மேலும் நிதி அறிக்கை நேர்மை, உள் கட்டுப்பாடுகள், நிறுவன இடர் மேலாண்மை, ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் தணிக்கை செயல்முறைகளை மேற்பார்வையிடுவார். நிறுவனம் தனது செயல்பாட்டு ஒழுக்கம், ஆளுகை அமைப்புகள் மற்றும் நீண்டகால மதிப்பு உருவாக்கும் கட்டமைப்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதால், அவரது நியமனம் இயக்குநர்கள் குழுவின் மேற்பார்வைத் திறன்களுக்கு குறிப்பிடத்தக்க ஆழத்தைச் சேர்க்கிறது.
வெர்சே இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் பற்றி:
வெர்சே இன்னோவேஷனின் மையக்கருத்து, டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க தொழில்நுட்பம் உதவும் என்பதாகும். இந்நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்தே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான நுகர்வோரின் பூர்த்தி செய்யப்படாத உள்ளடக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சவாலை வெர்சே ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் தனித்துவமான செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் மற்றும் ஆழ்நிலைக் கற்றல் தொழில்நுட்பங்கள், மில்லியன் கணக்கான பயனர்களுக்கு அவர்களின் நுகர்வு விருப்பங்களின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தை வழங்க உதவுகின்றன.
இன்று, வெர்சே இன்னோவேஷனின் தனியுரிம தொழில்நுட்பத் தளம், பாரதம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் பயனர்கள் டெய்லிஹன்ட்டில் தங்கள் உள்ளூர் மொழியில் உள்ளடக்கத்தை ரசிக்க உதவுகிறது. அதன் தொழில்நுட்பம், இந்தியாவின் நம்பர் 1 மற்றும் மிகவும் ஈர்க்கக்கூடிய கிரியேட்டர்ஸ் செயலியான ஜோஷையும் இயக்குகிறது. கூடுதலாக, வெர்ஸ் நிறுவனம், நெக்ஸ்வெர்ஸ்.ஏஐ, டெய்லிஹன்ட் பிரீமியம், ஜோஷின் ஆடியோ காலிங் & ஆடியோ ஸ்டோரீஸ் மற்றும் வெர்ஸ் கொலாப் உள்ளிட்ட, செயற்கை நுண்ணறிவை முதன்மைப்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் தளங்களின் ஒருங்கிணைந்த தொகுப்பைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் ஒன்றிணைந்து, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் நுகர்வோர், உள்ளடக்கம் மற்றும் பிராண்டுகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை மறுவடிவமைத்து வருகின்றன.
‘பாரத்’ (Bharat) எனப்படும் இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையை மையமாகக் கொண்ட தனது செயலிகளின் தொகுப்புடன், உள்ளூர் மொழிகளுக்கான தொழில்நுட்பத் துறையில் முதல் ‘யூனிகார்ன்’ (Unicorn) நிறுவனமாக VerSe Innovation உருவெடுத்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் CPP Investments, Ontario Teachers Pension Plan (OTPP), Qatar Investment Authority (QIA), Siguler Guff, Carlyle Group, Baillie Gifford, Goldman Sachs, Gladebrooks, Falcon Edge Capital, AlphaWave, Sequoia Capital India, Matrix Partners India, Google, Microsoft, Lupa Systems, Luxor Group, Sofina, B Capital Group, IIFL, Kotak, Catamaran, Bay Capital, Edelweiss மற்றும் Omidyar Network உள்ளிட்ட பல நிறுவனங்களை தனது தற்போதைய முதலீட்டாளர்களாகக் கொண்டுள்ளது.
Read More : இண்டிகோவின் புதிய CEO-வாக வில்லியம் வால்ஷ் நியமனம்..!



