கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) மற்றும் பி.யூ.சி. (PUC) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மாநில அரசு மாணவர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் சதவீதத்தை குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் எடுக்க வேண்டியிருந்தது. தற்போது, இந்த சதவீதம் 33% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்ச்சி விதிமுறைகள் என்ன..?
இந்தக் குறைக்கப்பட்ட சதவீதத்தின்படி, இனி மாணவர்கள் கீழ்க்கண்டவாறு மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி அடைய முடியும்.
எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) மாணவர்கள்: மொத்தமுள்ள 625 மதிப்பெண்களில் 206 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது.
பி.யூ.சி. (PUC) மாணவர்கள்: மொத்தமுள்ள 600 மதிப்பெண்களில் 198 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது.
மேலும், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற விதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும், கல்விச் சுமையைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



