செம குட் நியூஸ்..!! மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

money college 2025

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தில் இருந்து வந்துள்ள மாணவர்களுக்கு, மத்திய கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில தகுதியும், நிதிசார்ந்த ஆதரவும் வழங்கும் வகையில், மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-2026 கல்வியாண்டுக்கான புதியதும் புதுப்பித்தலும் செய்ய வேண்டிய கல்வி உதவித்தொகை (scholarship) திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இந்த கல்வி உதவித் திட்டத்தின் கீழ், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT), மேலாண்மை கழகங்கள் (IIM), தகவல் தொழில்நுட்ப கழகங்கள் (IIIT), தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (NIT), மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் (Central Universities) பட்டம் மற்றும் மேற்படிப்புக்காக பயிலும் மாணவர்கள் பயனடையலாம். இது தமிழகத்தைச் சேர்ந்த BC, MBC/DNC வகுப்பினர் மாணவர்கள் மட்டுமானது.

மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆண்டிற்கு ரூ.2.5 இலட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள விவரப்படி, கல்வி கட்டணமாக மாணவர்கள் செலுத்தும் தொகை, அதாவது கற்பிப்பு, தேர்வு, சிறப்பு மற்றும் கட்டாய கட்டணங்களை முழுமையாக அல்லது அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரை அரசு வழங்கவுள்ளது.

இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தை நேரில் சென்று, அல்லது தங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes
என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

குறிப்பாக, ஏற்கனவே மத்திய அல்லது மாநில அரசின் பிற கல்வி உதவித்தொகை திட்டங்களில் பயனடைவோர் இந்த உதவிக்கு தகுதியற்றவர்கள். விண்ணப்பிக்க தேவையான எல்லா ஆவணங்களும், கல்வி நிறுவனத்தின் சான்றொப்பத்துடன் கூடிய “Bonafide Certificate” உட்பட இணைக்கப்பட்டு, தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் :

BC வகுப்பு மாணவர்கள் :

ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,
எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம்,
சேப்பாக்கம், சென்னை-5.
தொலைபேசி: 044-29515942
மின்னஞ்சல்: tngovtiitscholarship@gmail.com

MBC/DNC வகுப்பினர் மாணவர்கள் :

ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம்,
எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம்,
சேப்பாக்கம், சென்னை-5.
தொலைபேசி: 9445477817
மின்னஞ்சல்: mbcdnciitscholarship@gmail.com

விண்ணப்பங்களை புதுப்பிக்க கடைசி நாள் : 30.09.2025

புதிய விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 31.10.2025

Read More : விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன் தெரியுமா..? ஒரு நாட்டையே கொடுமை செய்த அரக்கன் தான் காரணமாம்..!!

CHELLA

Next Post

அசத்தல்!. உலகை அதிரவிடும் AI கண்டுபிடிப்பு!. டாப் 10-ல் இடம்பிடித்த இந்தியா!. முதலிடம் பிடித்த நாடு இதுதான்!

Mon Aug 25 , 2025
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு போட்டியில் இந்தியா 24 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 29 குறிப்பிடத்தக்க AI மாதிரிகள் உள்ளன, மேலும் AI தொடர்பான முதலீடுகள் மொத்தம் 7.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றன. சுவாரஸ்யமாக, புதிய ஆய்வொன்றின் படி, வேலைத்தளங்களில் AI பயன்பாடு இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 92% ஊழியர்கள் தங்கள் தினசரி பணிகளில் AI-ஐ பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Linkee […]
global AI innovation race 11zon

You May Like