மிகவும் சிறப்பான திட்டம்.. பஞ்சாபிலும் காலை உணவு திட்டம் வழங்க பரிசீலனை.. பஞ்சாப் முதல்வர் பெருமிதம்..!

morning breakfast scheme

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்குவது மிகவும் சிறப்பான திட்டம் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி வைத்தார்.


இதன்மூலம் 30,992 பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணவ, மாணவிகள் காலை உணவை சூடாக, சுவையாக சாப்பிட்டு, மகிழ்ச்சியுடன் பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தி படித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 2024 ஜூலை 15-ம் தேதி, காமராஜர் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2.24 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

முதல்வரின் காலை உணவு திட்டத்தால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுத்தப்பட்டு, 90 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளிடம் முந்தைய பாடங்களை நினைவுகூரும் திறன் அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது களையப்பட்டதுடன், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படுத்தப்பட்டுள்ளது..

நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.. அதன்படி, முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்றார்.. இந்த திட்டத்தின் மூலம், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3,05,000 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்..

தமிழக முதல்வர் ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் பள்ளிக் குழந்தைகளுடன் காலை உணவை சாப்பிட்டனர்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய பகவந்த் மான் “ பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்குவது மிகவும் சிறப்பான திட்டம்.. மாணவர்களின் உடல்நிலையை முன்னேற்ற காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது நல்ல விஷயம்.. பஞ்சாபிலும் காலை உணவு திட்டம் வழங்க பரிசீலனை செய்து வருகிறேன்..

பஞ்சாப் உணவுகள் தமிழகத்திலும் விற்கப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.. பஞ்சாப் மாநிலத்தின் ஒவ்வொரு இடத்திலும் தென் மாநில உணவுகள் நிறைந்திருக்கின்றன.. தென் மாநில உணவுகள் தான் தேசிய உணவுகள் போல் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கின்றன.. கல்வி, சுகாதாரத்திற்கு பஞ்சாப் அரசும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம்.. தமிழ்நாடு அரசில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? - முழு விவரம்..

Tue Aug 26 , 2025
Salary of Rs. 1.50 lakh per month.. Job in Tamil Nadu government.. Who can apply..?
tn govt jobs 1

You May Like