தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நகர்ந்த டிட்வா புயல், சென்னையில் இருந்து 140 கி.மீ. தொலைவில் வந்தபோது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது..
இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை மையம் தகவவல் தெரிவித்துள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் தமிழகம் – புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிக்கு இணையாக வடக்கு நோக்கி நகர வாய்ப்பு என்று வானிலை மையம் கணித்துள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 50 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது..
இது கடலூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு 200 கி.மீ தொலைவிலும் ஆழ்ந்த் காற்றழுத்தம் நிலவுகிறது.. இது கடந்த 6 மணி நேரமாக 10 கி.மீ வேகத்தில் நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
எனினும் இன்று அதிகாலை முதலே சென்னையில் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. இந்த நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. மேலும் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..



