பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த சில நாட்களாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற நிலையில், அவரது மருத்துவ நிலை இன்று மோசமானது.. இதனால் தற்போது அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டுள்ளார். 89 வயதாகும் தர்மேந்திரா மிக நெருங்கிய மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
தர்மேந்திராவின் நிலை இன்று மிகவும் மோசமாக மாறியது, அதனால் மருத்துவர்கள் அவரை முற்றிலும் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்தனர். அவருடைய குடும்பத்தினரும் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து அவரை பார்வையிட்டுவருகின்றனர்.
எனினும் இதுவரை குடும்பத்தினர் அல்லது மருத்துவமனை அவருடைய தற்போதைய உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. அவரை நேசிக்கும் ரசிகர்கள் மக்களின் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு செய்திகள் அனுப்பி வருகிறார்கள், விரைவில் அவரின் சுகமான உடல்நலத்துக்காக.
கடந்த வாரம், தர்மேந்திரா வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனையில் சேர்ந்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.. அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல்நிலை குறித்து கவலைப்பட தேவையில்லை என்று குடும்பத்தினர் உறுதி செய்தனர். .
இந்த வருடத் தொடக்கத்தில், தர்மேந்திரா கண் அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் “ நான் பலம் வாய்ந்தவன். இன்னும் தர்மேந்திராவில் பலம் நிறைந்துள்ளது. இன்னும் உயிருள்ளேன். என் கண் graft (corneal transplantation) ஆனது. நான் பலம் வாய்ந்தவன். என் ரசிகர்களை நேசிக்கிறேன்.” என்று கூறியிருந்தார்..
தர்மேந்திரா கடைசியாக“ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி” படத்தில் நடித்திருந்தார்.. அடுத்ததாக அவர் “இக்கிஸ்” படத்தில் தோன்றவுள்ளார், இதில் அவரது ஷோலே கூட்டாரி அமிதாப் பச்சன் பேரன் அகவஸ்த்யா நந்தாவும் நடித்துள்ளார்.
தர்மேந்திரா பாலிவுட்டில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக Sholay, Chupke Chupke, Seeta Aur Geeta போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் ரசிகர்களால் “ஹீ-மேன்” என அழைக்கப்படுகிறார். இவரின் முதல் மனைவி பிரகாஷ் கவுர் ஆவார்.. இந்த தம்பதிக்கு சன்னி தியோல், பாபி என்ற மகன்களும் விஜேதா, அஜீதா என்ற மகள்களும் உள்ளனர்.. இதில் சன்னி தியோல், பாபி தியோல் இருவரும் பிரபல நடிகர்கள் ஆவார்..
தர்மேந்திரா நடிகை ஹேமா மாலினியை 2-வது திருமணம் செய்து கொண்டனர்.. இந்த தம்பதிக்கு ஈஷா தியோ மற்றும் அஹனா தியோல் என்ற பிள்ளைகள் உள்ளனர்.. தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினி பல புகழ்பெற்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர், அதில் Sholay முக்கியமாக குறிப்பிடத்தக்கது.
Read More : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு.. புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!



