பழம்பெரும் பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகர் சதீஷ் ஷா காலமானார். அவருக்கு வயது 74. கடந்த சில நாட்களாக சிறுநீரகம் தொடர்பான பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.. அவரின் மறைவு பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
தனது திரை வாழ்க்கையில் பல ஐகானிக் வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார்… கல் ஹோ நா ஹோ, ஜானே பி தோ யாரோ, சாராபாய் V/S சாராபாய், மெய்ன் ஹூன் நா ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றன.
சதீஷ் ஷாவின் மறைவு குறித்து பிரபல நடிகர் ஜானி லீவர் தனது எக்ஸ் பக்கத்தில் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். அவரின் பதிவில், “ஒரு சிறந்த கலைஞரையும் 40 ஆண்டுகளுக்கும் மேலான எனது அன்பான நண்பரையும் இழந்துவிட்டோம் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் வருத்தமாக இருக்கிறது. நம்புவது கடினம் – நான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருடன் பேசினேன். சதீஷ் பாய், உங்களை உண்மையிலேயே மிஸ் பண்ணுவோம். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கு உங்கள் மகத்தான பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்..
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் சங்கம் (CINTAA) அதன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் சதீஷ் ஷாவுக்கு அஞ்சலி செலுத்தியது. X பதிவில், “சதீஷ் ஷா ஜி (1985 முதல் உறுப்பினர்) மறைவுக்கு CINTAA தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : பாம்பு விஷம் என்ன நிறத்தில் இருக்கும்? 99 சதவீத மக்களுக்கு இது தெரியாது!



