ஏவிஎம் தயாரிப்பாளர் சரவணன் இன்று வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்கள் நடிகர்களின் படங்களை தயாரித்தவர்கள் ஏ.வி.எம் தயாரிப்புக்குழு. தமிழ் சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படும் AVM நிறுவனத்தை தொடங்கியவர் ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார். மூன்று தலைமுறைகளாக தரமான படங்களை தயாரித்து புதிய முத்திரையை பதித்திருக்கிறது ஏ.வி.எம்.
தற்போது ஏ.வி.எம் சார்பில் அழகப்பா செட்டியாரின் மகன்கள் படங்களை தயாரித்து வருகின்றனர். அவர்களுள் முக்கியமானவர் ஏ.வி.எம் சரவணன். எம்.இ.ஆர் பீக்கில் இருந்த காலத்தில் இருந்தே அவருடன் பணியாற்றி வருகிறார். 86 வயதான ஏவிஎம் சரவணன் இன்று வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
நேற்று தனது 86வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இன்று காலை உயிரிழந்தது தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதி மரியாதைக்காக ஏவிஎம் சரவணனின் உடல் ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள 3வது தளத்தில் இன்று காலை வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read more: இந்து கடவுள்களை அவமதித்த முதல்வர் ஸ்டாலின்…! 2026-ல் மக்கள் பாடம் புகட்டுவது உறுதி…!



