பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி கத்ரீனா கைப் (Katrina Kaif) மற்றும் விக்கி கௌஷல் (Vicky Kaushal) தங்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளனர்.. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.. இந்த இனிய செய்தியை இருவரும் தங்களின் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர்.
இன்று , இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு, தங்களின் ஆண் குழந்தை பிறந்ததை அறிவித்தனர். மேலும் “எங்களின் குட்டி மகிழ்ச்சி கட்டு வந்துவிட்டது. பேரன்பும் நன்றியும் நிறைந்த இதயத்துடன் எங்கள் ஆண் குழந்தையை வரவேற்கிறோம்,” என்று தெரிவித்துள்ளனர்..
கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் ஜோடிக்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..
விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைப் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில், ராஜஸ்தானில் உள்ள Six Senses Fort Barwara Resort-இல் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். கடந்த செப்டம்பர் மாதத்தில், விக்கி மற்றும் கத்ரீனா இணைந்து தங்கள் கர்ப்பத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர்.. இதன் மூலம் பல மாதங்களாக இருந்த ஊகங்களுக்கு முடிவுக்கட்டினர். முன்னதாக மும்பையில் நடைபெற்ற Yuvaa Conclave நிகழ்ச்சியில் விக்கி, தந்தையாக போவது குறித்து பேசினார்..
விக்கி கடைசியாக ‘சாவா’ என்ற மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்தில் நடித்தார். அவர் தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ படத்தில் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார். கத்ரீனா கைஃப் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடித்தார். எனினும் விக்கி கௌஷல் – கத்ரீனா ஜோடி இதுவரை எந்த திரைப்படத்திலும் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..



