நேற்று மத்திய போலந்தின் ராடோமில் நடந்த ஒரு விமான கண்காட்சிக்கான ஒத்திகையின் போது போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, வார இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த ராடோம் விமான கண்காட்சி ரத்து செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் விமானம் ஓடுபாதையில் விழுந்து சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஆடம் ஸ்லாப்கா, விமானியின் மரணத்தை உறுதிப்படுத்தினார், மேலும் பாதுகாப்பு அமைச்சர் Władysław Kosiniak-Kamysz விபத்து நடந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார் என்றும் கூறினார். இந்த விமான விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளில் வெளியாகி உள்ளன.. அதில், விமானம் தரையில் மோதியபோது தீப்பிடித்து எரிந்ததை காணலாம்..
போலந்து பாதுகாப்பு அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விபத்தில் உயிரிழந்த விமானிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. அவரின் பதிவில் “F-16 விபத்தில், போலந்து இராணுவ விமானி ஒருவர் இறந்தார், அவர் தாய்நாட்டிற்கு எப்போதும் அர்ப்பணிப்புடனும் மிகுந்த தைரியத்துடனும் சேவை செய்த அதிகாரி. அவரது நினைவாக நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது விமானப்படைக்கும் முழு போலந்து இராணுவத்திற்கும் பெரும் இழப்பாகும்” என்று அவர் எழுதினார்.
ராடோ விமானக் கண்காட்சி ரத்து
இந்த விமான விபத்தை தொடர்ந்து, வார இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த ராடோம் விமானக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பாதுகாப்பு அமைச்சர், விமானியை கௌரவித்தார், அர்ப்பணிப்புடனும் தைரியத்துடனும் தனது நாட்டிற்கு சேவை செய்த அதிகாரி என்று அவரை விவரித்தார்.