2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது..
தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. அக்கட்சி தலைவர் விஜய் கரூர் சம்பவத்திற்கு பின் மீண்டும் ஆக்டிவாக செயல்பட தொடங்கி உள்ளார்.. சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
மேலும் தவெக தலைமையையை ஏற்று கூட்டணிக்கு வரும் கட்சிகளை வரவேற்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.. கூட்டணி குறித்து அனைத்து இறுதி முடிவுகளை எடுக்க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.. தவெக சார்பில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கும் சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் தவெக சார்பில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. இது தொடர்பான விஜய் இன்று வெளியிட்டுள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக வெற்றிக் கழகத்தில் அணிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு (Media and Communications) அணியில் பின்வரும் முறையில் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
பொறுப்பாளர் (In charge):
திரு. A.ராஜ்மோகன், துணைப் பொதுச் செயலாளர்
ஒருங்கிணைப்பாளர்கள்:
திரு. S.ரமேஷ் செங்கல்பட்டு
திருமதி. J.கேத்ரின் பாண்டியன், திருநெல்வேலி
தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்:
திரு. G.பெலிக்ஸ் ஜெரால்டு, சென்னை
திரு. வழக்கறிஞர் M.சத்தியகுமார். சென்னை
திருமதி. M.K.தேன்மொழி பிரசன்னா. மதுரை
மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள்:
திரு. முகில் வீரப்பன் (எ) மு. சு.சிவகுமார்.
புதுக்கோட்டை
திரு. அமலன் சாம்ராஜ் பிரபாகர், சென்னை
திரு. க.சி.தி. அனந்தஜித் மகியா. திருவள்ளூர்
ஞான செல்வின் இன்பராஜ். செங்கல்பட்டு
திரு. மு. 11. திரு. முகமது இப்ராஹிம், சென்னை
திரு. ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல். சென்னை
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து. எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



