தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிப்போம் என்று அக்கட்சி தலைவர் விஜய் கூறி வருகிறார்.. தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சமீபத்தில் அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.. விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. அன்றைய தினமே பெரம்பூரில் இருந்து தனது பிரச்சாரத்தையும் விஜய் தொடங்கினார்..
இதை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், திருச்சியிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.. ஆனால் விஜய் பெரம்பூர் தாக்கல் செய்த வேட்பு மனுவுக்கும், திருச்சியில் தாக்கல் செய்த வேட்பு மனுவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பிட்டிருந்தார்.. கடந்த 2-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதி மனுவில், தன் மீது 2 வழக்குகள் இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.
கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, பெரம்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியது மற்றும் ஆம்புலன்ஸ் செல்ல இடையூறாகக் கூட்டத்தைக் கூட்டியது போன்ற புகார்களின் கீழ் 5 பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பெரம்பூர் வேட்புமனுவி இந்த வழக்கு பற்றி குறிப்பிடாதது ஒன்றும் பிரச்சனை இல்லை..
ஆனால் கடந்த ஆகஸ்ட் 2025-இல் மதுரையில் நடைபெற்ற தவெக-வின் இரண்டாவது மாநில மாநாட்டின் போது, மேடை அருகே வந்த ஒரு தொண்டரைப் பாதுகாவலர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் விஜய் மற்றும் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெரம்பூர் வேட்புமனுவில் இந்த வழக்கு குறித்து விஜய் குறிப்பிடாதது சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.. பெரம்பூரில் விஜய் வேட்புமனு தள்ளுபடியாக கூட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.. ஆனால் திருச்சி கிழக்கு தொகுதில் விஜய் இந்த வழக்குகளையும் குறிப்பிட்டுள்ளார்..
விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது வயதையும் மாற்றி மாற்றி குறிப்பிட்டுள்ளார்.. கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் தாக்கல் செய்த விஜய் தனது வயதை 52 என்று குறிப்பிட்டுள்ளார்.. நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது வயது 51 என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.. குற்ற வழக்கு, வயது தொடர்பான விவரங்களை விஜய் மாற்றி மாற்றி குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.. பெரம்பூர், திருச்சி கிழக்கு மாறுபட்ட தகவல்களை தெரிவித்திருப்பதால் விஜய்யின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பெரம்பூர் தொகுதிக்கான திருத்தப்பட்ட கூடுதல் மனுவை விஜய் இன்று தாக்கல் செய்கிறார்.. அதாவது விடுபட்ட கூடுதல் தகவலை ஒரு Supplementary/ Additional Affidavit ஆக இன்று மீண்டும் தாக்கல் செய்ய உள்ளாராம்.. இந்த மனுவை தாக்கல் செய்யும் போது விஜய்யின் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது..
இதனிடையே பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கு மாற்றாக வேட்பாளர்கள் போடப்பட்டுள்ளனர்.. பெரம்பூரில் சிவா என்பவரும், திருச்சி கிழக்கில் கு.ப. கிருஷ்ணணின் மகன் சிரஞ்சீவியும் மாற்று வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.. ஒருவேளை விஜய் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒரு வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் இவர்களில் ஒருவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
Read More : அண்ணாமலைக்கு ஏன் சீட் கொடுக்கவில்லை..? பியூஷ் கோயல் பரபரப்பு பதில்..!



