கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இதுகுறித்து தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் விஜய் ஏன் இன்னும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.. இந்த சூழலில் கரூர் சம்பவம் தொடர்பாக 20 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார்.. அதன்படி அவர்கள் கரூரில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து கூறினர்.. அப்போது தான் விஜய் வீடியோ காலில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது கரூர் செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.. தவெக தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.. மேலும் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையையும் அவர் வழங்க உள்ளார்.. இதற்காக விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டும், உரிய பாதுகாப்பு தர கோரியும் தவெக தரப்பு நேற்று கரூர் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்தது..
குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூர் சென்று மீண்டும் திருச்சி வரும் வரை விஜய் வாகனத்திற்கு காவல்துறை முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்.. விஜய் வாகனத்திற்கு பின்னால் கட்சியினர், தொண்டர்கள், பொதுமக்கள், ஊடகங்கள் என யாரும் பின் தொடர அனுமதிக்கக் கூடாது.. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கை சுற்றி 1 கி.மீ தூரம் வரை எந்த கூட்டமும் கூட அனுமதிக்கக் கூடாது..” போன்ற கோரிக்கைகள் அந்த மனுவில் விடுக்கப்பட்டுள்ளன..
இதனிடையே கரூர் சம்பவத்திற்கு பின் தலைமறைவான புஸ்ஸி ஆனந்த் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் வெளியே வந்து விஜய்யை சந்தித்து பேசினார்.. அப்போது கரூர் செல்வது தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை விஜய் அமைத்ததாக கூறப்பட்டது.. மேலும் கரூரில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. அப்போது தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை விஜய் வழங்குவார் என்றும் கூறப்பட்டது..
இந்த நிலையில் விஜய் கரூர் செல்லும் பிளானை கைவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. கரூர் செல்வது விஜய் புஸ்ஸி ஆனந்த், அருண் ராஜ், ஜான் ஆரோக்கிய சாமி (தவெகவின் ஆலோசகர்) ஆகியோருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.. அப்போது விஜய்யின் கரூர் பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேசப்பட்டதாம்.. அந்த சமயத்தில் தான் ஜான் ஆரோக்கியசாமி ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.. அதாவது விஜய் கரூர் செல்லும் போது அவரை அட்டாக் செய்ய ஒரு கும்பல் ரெடியாக இருக்கிறது என்று தனக்கு ஒரு ரகசிய தகவல் வந்துள்ளது என்று ஜான் ஆரோக்கியசாமி கூறியுள்ளார்..
எனவே நீங்க கரூருக்கு போக வேண்டாம்.. அந்த பிளானை கைவிட்டு விடலாம் என்றும் விஜய்யிடம் கூறியுள்ளார்.. எனவே விஜய்யும் கரூருக்கு போகாமல் இருந்துவிடுவோம் என்றும் சொன்னாராம்.. விஜய் கரூருக்கு போகப்போவதில்லை என்றும் வழக்கம் போல் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு அழைத்து வந்து ஆறுதல் சொல்லி நிதியுதவி அளிக்கப்படும் என்று அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாம்.. விஜய் கரூர் செல்லப் போவதில்லை சரி, ஆனால் அந்த 20 லட்சம் நிவாரணத் தொகையாவது கொடுப்பாரர்களா அல்லது ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி அதனை கொடுக்காமல் விட்டுவிடுவார்களா என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது..
Read More : Breaking : இவர்களுக்கும் 20% தீபாவளி போனஸ்.. குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு..



