தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்..
அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
இந்த படத்தை கேவிஎன் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் போஸ்டர், முதல் சிங்கிள் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.. இந்த சூழலில் இன்று ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாம்பூரில் உள்ள புகிட் ஜலில் அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சுமார் 80,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.. இந்த விழா தொடர்பாக மலேசிய போலீஸ் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது..
அதன்படி விஜய்யின் ரசிகர்கள்ள் யாரும் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சிச் சின்னம் பொறித்த உடைகள் அல்லது துண்டுகளை அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. அரசியல் சார்ந்த எந்த பொருளையும் எடுத்து செல்லக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த விதிகளை மீறுவோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலேசியத் தரப்பில் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில் மலேசியாவில் நடைபெற்று வரும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவில் தவெக கொடியை காட்டிய ரசிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. சினிமா நிகழ்ச்சி என்பதால், அரசியல் விஷயங்களை பேசக்கூடாது, அரசியல் சார்ந்த எந்த விஷயங்களும் இடம்பெறக் கூடாது என மலேசிய போலீஸ் கட்டுப்பாடு விதித்திருந்தது.. இந்த கட்டுப்பாட்டை மீறி ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் பலரும் TVK, TVK என முழக்கமிட்டனர்.. இந்த சூழலில் தவெக கொடிசயை அசைத்த விஜய் ரசிகரை மலேசிய போலீஸ் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.
Read More : புஷ்பா 2 கூட்ட நெரிசல் சம்பவம்: அல்லு அர்ஜுனின் பெயர் குற்றவாளியாக சேர்ப்பு.. குற்றப்பத்திரிகை தாக்கல்..!



