பிரபல பேச்சாளரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத் திமுக, மதிமுக, அதிமுக, அமமுக என பல கட்சிகளில் இருந்தவர்.. ஆனால் சில ஆண்டுகளாக எந்த கட்சியிலும் இல்லாம; திராவிட கொள்கைகளை பற்றி பேசி வந்தார்….
நாஞ்சில் சம்பத் கடந்த சில நாட்களாகவே விஜய்யின் தவெகவுக்கு ஆதரவாக பேசி வந்ததாலேயே அவருக்கு அறிவுத்திருவிழாவில் பேச அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.. மேலும் திமுகவின் அறிவுத்திருவிழாவிற்கு அழைப்பு விடுக்கப்படாதது தனக்கு வருத்தம் தெரிவித்தார்.. 2026 தேர்தலில் திமுகவுக்கு தவெக தான் சவாலாக இருக்கும் என்றும் அதிமுக சவாலாக இருக்கும் என்றும் சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது..
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.. மதிமுக, அதிமுக, திமுகவை தொடர்ந்து தற்போது தமிழக வெற்றிக்கழகத்தில் நாஞ்சில் சம்பத் இணைந்தார்..
இந்த நிலையில் நேற்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு விஜய் கட்சிப் பொறுப்பை வழங்கி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர். சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர், அண்ணன் திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள், தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அண்ணன் திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள். கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவர், பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார். கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி. மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..
Read More : விஜய் உடன் நடந்த ரகசிய மீட்டிங்.. தவெக + காங்கிரஸ் கூட்டணி உறுதியா? செல்வப்பெருந்தகை பரபரப்பு தகவல்.!



