2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது..
தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. அக்கட்சி தலைவர் விஜய் கரூர் சம்பவத்திற்கு பின் மீண்டும் ஆக்டிவாக செயல்பட தொடங்கி உள்ளார்.. சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
மேலும் தவெக தலைமையையை ஏற்று கூட்டணிக்கு வரும் கட்சிகளை வரவேற்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.. கூட்டணி குறித்து அனைத்து இறுதி முடிவுகளை எடுக்க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.. தவெக சார்பில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கும் சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது..
இதனிடையே அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.. சமீபத்தில் திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பதி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.சி.டி பிரபாகரன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்..
இந்த நிலையில் திமுக, அதிமுக, தவாக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.. குறிப்பாக திமுகவின் தஞ்சை மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சி. சுந்தரபாண்டியன் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. தவாகவை சேர்ந்த ஜெகதீச பண்டியன், காமராஜரின் பேத்தி மயூரி, நடிகர் வேல ராம மூர்த்தியின் மகன் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்துள்ளனர்.. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த பல நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
Read More : Flash : சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து..! பயணிகளுக்கு பாதிப்பா? பெரும் பரபரப்பு..!



