“விஜய்.. உங்களின் சுயநல அரசியலால் என் நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன்..” டிராகன் பட நடிகை வேதனை பதிவு..!

actress kayadu lohar

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று இரவு 7 மணிக்குமேல் நடைபெற்ற பிரசாரத்தின் போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த பரிதாபகரமான சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.


கூட்ட நெரிசலில் காயமடைந்த 52 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மொத்தம் 113 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி தமிழகமெங்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் டிராகன் பட நடிகை காயடு லோஹர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கரூர் தவெக பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். கரூர் பேரணியில் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரை இழந்தேன். எல்லாம் TVK யின் சுயநல அரசியலுக்காக. விஜய், மக்கள் உங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு முட்டுக்கட்டை போடவில்லை. உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்? என்று கண்ணீரோடு பதிவிட்டுள்ளார்.

Read more: கரூர் சம்பவம்: “உரிய பாதுகாப்பு கொடுக்காதது அரசின் தவறு..” விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..!

English Summary

“Vijay.. I have lost my close friend because of your selfish politics..” Dragon film actress posts anguish..!

Next Post

டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! விண்ணப்பிப்பது எப்படி..?

Sun Sep 28 , 2025
மத்திய அரசின் முக்கியப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் பயிற்சி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது, பொறியியல், பட்டயக் கணக்காளர் (CA/CMA) மற்றும் முதுகலை வணிக மேலாண்மை (MBA) போன்ற உயர்கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசுத் துறையில் ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான வேலையைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பாகும். காலியிடங்கள் மற்றும் சம்பள விவரம் : மொத்தம் […]
Govt Job 2025

You May Like