கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், 41 உயிர்கள் பறிபோவதற்குக் காரணமானவர்களை முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்காமல் கரூர் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
“நிஜமான துணிச்சல் இருந்திருந்தால், அந்தத் துயரச் சம்பவத்தின்போது விஜய் கரூரை விட்டு ஓடியிருக்கக் கூடாது” என்று கூறிய அவர், விஜய்யை ‘கோழை’ மற்றும் ‘பச்சோந்தி’ என ஒருமையில் விமர்சித்தார். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் விஜய் வருவார் என்று சொல்வதெல்லாம் வெறும் மாயை என சாடினார்.
தமிழகத்தின் அரசியல் பாரம்பரியத்தை குறிப்பிட்டு பேசிய அவர், காமராஜர், கக்கன், முத்துராமலிங்கத் தேவர் போன்ற பெரும் தலைவர்கள் கால்பதித்த இந்த மண்ணில், சினிமா பின்னணியைக் கொண்டவர்களை ஒழிப்பதே தங்களின் இலக்கு என முழங்கினார். “தமிழகத்திற்கு வீட்டுக்கு ஒரு விஜய் தேவையில்லை; மாறாக தேசப்பற்று மிக்க தலைவர்களே தேவை” என்று குறிப்பிட்ட அவர், தவெக தலைவரை தற்குறி என விமர்சித்து பேசினார்.
விஜய்யை தரக்குறைவாகப் பேசுவதைக் கண்டித்து, கூட்டத்தில் இருந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீரென எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் நாம் தமிழர் மற்றும் தவெக தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Read More : இதெல்லாம் தேவையா..? செங்கோட்டையனுக்காக கண்ணீர் விடுகிறேன்..!! வறுத்தெடுத்த திண்டுக்கல் சீனிவாசன்..!!



