கரூர் செல்கிறார் விஜய்? எப்போது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்..

TVK Vijay 2025 2

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது..


ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், திமுக அரசை விமர்சித்து பேசியிருந்தார்.. மேலும் தனது வீடியோவில் அவர் வருத்தம் தெரிவிக்காததும், மன்னிப்பு கேட்காததும் அதிருப்தியை ஏற்படுத்தியது.. அதுமட்டுமின்றி “ சி.எம்.சார் என்ன பழிவாங்கணும்னா என்ன எது வேண்டுமானாலும் செய்யுங்க.. தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க..” என்று கூறியிருந்தார்.. விஜய்யின் இந்த பேச்சு சினிமா டயலாக் மாதிரி இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர்..

இந்த சூழலில் இதுதொடர்பான வழக்கில் தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.. தவெக என்ன மாதிரியான கட்சி என விமர்சித்த நீதிமன்றம் விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை என்றும் காட்டமாக தெரிவித்தது.. மேலும் சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தவெகவுக்கு கடும் கண்டனத்தையும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது..

இந்த சூழலில் விஜய்யின் ஆலோசனையின் பேரில் தவெக நிர்வாகிகள் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறிவருகின்றனர்.. அங்கு அந்த நிர்வாகிகளுக்கு விஜய் வீடியோ கால் செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடியோ காலில் இன்று ஆறுதல் கூறினார்.. ” உங்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.. உங்களில் ஒருவனாக இருப்பேன்.. என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்..” என்று விஜய் பேசினார் என்ற் தகவல்கள் தெரிவிக்கின்றன..

இந்த நிலையில் கரூர் செல்ல விஜய் ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் இதற்காக பாதுகாப்பு கோரி அம்மாவட்ட கால்துறைக்கு இ மெயில் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.. அதற்கு உரிய பதில் கிடைக்காததால் விஜய் தரப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. அனுமதி கிடைத்ததும் விஜய் கரூர் செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

Read More : மருத்துவமனையில் இருந்து ராமதாஸ் டிஸ்சார்ஜ்! “எனக்கு ஓய்வே கிடையாது” என கருத்து!

RUPA

Next Post

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில்.. நான்கு திவ்ய தேசங்கள் ஒரே இடத்தில் அமைந்த அதிசய தலம்..!

Wed Oct 8 , 2025
Kanchipuram Ulagalandha Perumal Temple.. A miraculous place where four divine countries are located in one place..!
kanchi temple 1

You May Like