கரூர் செல்லவிருக்கும் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தவெக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது..
ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், திமுக அரசை விமர்சித்து பேசியிருந்தார்.. மேலும் தனது வீடியோவில் அவர் வருத்தம் தெரிவிக்காததும், மன்னிப்பு கேட்காததும் அதிருப்தியை ஏற்படுத்தியது.. அதுமட்டுமின்றி “ சி.எம்.சார் என்ன பழிவாங்கணும்னா என்ன எது வேண்டுமானாலும் செய்யுங்க.. தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க..” என்று கூறியிருந்தார்.. விஜய்யின் இந்த பேச்சு சினிமா டயலாக் மாதிரி இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர்..
இதுதொடர்பான வழக்கில் தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.. தவெக என்ன மாதிரியான கட்சி என விமர்சித்த நீதிமன்றம் விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை என்றும் காட்டமாக தெரிவித்தது.. மேலும் சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தவெகவுக்கு கடும் கண்டனத்தையும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது..
இந்த சூழலில் விஜய்யின் ஆலோசனையின் பேரில் தவெக நிர்வாகிகள் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறிவருகின்றனர்.. அங்கு அந்த நிர்வாகிகளுக்கு விஜய் வீடியோ கால் செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடியோ காலில் இன்று ஆறுதல் கூறினார்.. ” உங்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.. உங்களில் ஒருவனாக இருப்பேன்.. என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்..” என்று விஜய் பேசினார் என்ற் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதனிடையே கரூர் செல்ல விஜய் ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் இதற்காக பாதுகாப்பு கோரி அம்மாவட்ட கால்துறைக்கு இ மெயில் அனுப்பி உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில் கரூர் செல்லவிருக்கும் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தவெக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் ஆறுதல் கூற உள்ளதாகவும், தவெக சார்பில் அறிவித்த நிவாரண தொகையை அவர் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.. இதற்காக கரூர் செல்லவிருக்கும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. காவல்துறை அனுமதியும் பாதுகாப்பும் வழங்கும் பட்சத்தில் விஜய் விரைவில் கரூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : Flash : நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சீமான்! நடிகை தொடர்ந்த வழக்கை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!