தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. சனிக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணம் செய்யும் ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. விஜய் சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்வதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்..
தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தில் 15 நிமிடங்கள் தான் உரையாற்ற அனுமதி கேட்டுள்ளனர்.. தனது கொள்கை தலைவர்கள் பற்றி 10 நிமிடம் தான் விஜய் உரையாற்றுவாரா? இதில் சனிக்கிழமை தான் மக்களை சந்திக்க வருவாராம்.. ஏனெனில் சனிக்கிழமை வரை தனது பேச்சை மனப்பாடம் செய்யவேண்டும்.. அவர் நடித்து பார்த்து சனிகிழமை வந்து பேச வேண்டும்..
விஜய்க்கு அடிப்படையே தெரியவில்லை.. ஆண் சிங்கம் வேட்டைக்கு செல்லாது என்ற அடிப்படையே விஜய்க்கு தெரியவில்லை.. விஜய் பெண் சிங்கம் தான் வேட்டைக்கு போகும்..
விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வந்த சிங்கம்.. கோட்பாட்டு அளவில் விஜய்யை நான் எதிர்க்கிறேன். நாங்கள் முன்னேறி போகும் போது விஜய் அரசியலுக்கு வருகிறார்.. விஜய் பேசுவதை யாராவது உட்கார்ந்து கேட்கிறார்களா? எல்லாரும் படத்தின் முதல் காட்சி பார்ப்பது போல் கூச்சலிடுகின்றனர்..
பாஜக கொள்கை எதிரி என்று சொல்லும் விஜய், முதலில் தனது கொள்கையை சொல்ல வேண்டும்.. அப்போது பாஜக கொள்கை எதிரியா இல்லையா என்பதை நான் சொல்கிறேன்.. திமுக அரசியல் எதிரி என்றால் அதிமுக அரசியல் எதிரி இல்லையா? காங்கிரஸின் கொள்கை உனக்கு எதிரி இல்லையா? காங்கிரஸின் கொள்கைக்கும் பாஜகவின் கொள்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சங்கி என்றால் நண்பன் என பொருள் வருகிறது.. திராவிட என்றால் திருடன் என்றே வருகிறது..” என்று தெரிவித்தார்..
Read More : கட்டணமில்லா பேருந்து பயண அட்டை… போக்குவரத்து அமைச்சர் கூறிய மகிழ்ச்சி செய்தி…!