2026 சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தேமுதிக சாா்பில், ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ பிரசாரப் பயணம் நடைபெற்று வருகிறது. கடலூா் மாவட்டத்தில் திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெண்ணாடம், திட்டகுடி, ஆவட்டி ஆகிய பகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது பெண்ணாடம் வால் பட்டறையில் இருந்து பேருந்து நிலையம் வரையில் கேப்டன் ரத யாத்திரை நடந்தது. அப்பொழுது பிரேமலதா மேளம் அடித்து முரசு சின்னத்தை கூறினார் பின்னர் அவர் பேருந்து நிலையத்தில் கேப்டன் ரத யாத்திரை வாகனத்தில் இருந்து பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளிடம் கூறியதாவது தேமுதிக வளர்ச்சிக்காக தொகுதிவாரியாக மக்களை சந்தித்து வருகிறோம்.
விஜயின் இரண்டாவது மாநாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், விஜய் மாநாடு வெற்றி பெற தேமுதிக சார்பில் வாழ்த்துக்கள் அவரது மாநாட்டு திடலில் கொடிமரம் சாய்ந்ததற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் விஜய் எங்கள் வீட்டு பிள்ளை அவர் கேப்டன் பெயரை பயன்படுத்திக் கொள்ளட்டும் கேப்டன் தான் எங்களுடைய மானசீக அரசியல் குரு என்று சொல்லிவிட்டு வைக்க வேண்டும் என்றார்.
எந்தக் கூட்டணி எத்தனை சீட்டுகள் எந்த தொகுதி யார் வேட்பாளர்கள் என்பது குறித்து குருட்டுத்தனமாக கூற முடியாது ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநாட்டில் யார் கூட்டணி என்பதை தெளிவாக அறிவிப்போம் என்றார் இதனைத் தொடர்ந்து திட்டக்குடி ஆவட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தேமுதிகவின் கூட்டணி நிலைபாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Read more: விஜய் பேச்சை மதிக்காத தொண்டர்கள்..!! தவெக மாநாட்டு பந்தலில் சரக்குடன் ரகளை..!!