கரூரில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. பொதுமக்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. எனினும் விஜய் மீது எந்த தவறும் இல்லை இது திமுக செய்த சதி என்று தவெகவினர் கூறிவருகின்றனர்..
விஜய்க்கு ஆதரவாகவும், எதிராவும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.. விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
அந்த வகையில் நடிகை ஓவியா, விஜய்யை கைது செய்ய வேண்டும் (Arrest Vijay) என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. ஆனால், விஜய் ரசிகர்கள் இதை கடுமையாக வசைபாடிய நிலையில், அவர் தனது போஸ்டை டெலிட் செய்தார்.. பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட ஓவியா “ நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நான் மீண்டும் ட்விட்டருக்கு வந்தேன். கரூர் சம்பவத்திற்குப் பிறகு, எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டேன். தவெகவினரிடம் இருந்து எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் எனக்கு நிறைய எதிர்மறையான கருத்துகள் வந்தன. இது மிக மோசமானது. நடிகர் விஜய், இது சரியல்ல. முதலில், உங்கள் தவெக கட்சி உறுப்பினர்களிடம் பெண்களை மதிக்கச் சொல்லுங்கள்..” என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகை ஓவியா மீண்டும் விஜய்யை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கரூர் சம்பவத்திற்குப் பிறகு, ரஜினி சார், அஜித் சார் மற்றும் சூர்யா சார் ஆகியோரின் ரசிகர்கள் சரியான பாதையில் செல்வதால் அவர்கள் மீது எனக்கு மரியாதை அதிகரித்துள்ளது. ஆனால் விஜய் இளைஞர்களை தவறாக வழிநடத்தி, ஆதவ் அர்ஜுனா போன்றவர்களை தீங்கு விளைவிக்கும் ட்வீட்களைப் பதிவு செய்து வன்முறையை உருவாக்குகிறார். அவர் தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றுகிறார்.” என்று பதிவிட்டுள்ளார்..
ஆனால் ஓவியாவின் இந்த பதிவுக்கும் தவெகவினர் ஓவியாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்..