51 வயதிலும் இளமையா இருக்கும் விஜய்.. ஃபிட்னஸ் சீக்ரெட்டை சொன்ன தாய் ஷோபா..!!

vijay

நடிகர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகிறது.


கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக அப்படி இப்படி இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வரவேற்புடன் இருக்கக்கூடியவை. அதேசமயம் விஜய்க்கு சம்பளமாக 150 கோடி ரூபாய்வரை கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார்.

முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதால் சினிமாவிலிருந்து ஒதுங்கும் முடிவுக்கு வந்தார் அவர். அதன்படி ஹெச்.வினோத் இயக்கிவரும் ஜன நாயகன்தான் கடைசி படம் என்று கூறப்பட்டிருக்கிறது. நடிகராக அறிமுகமான நாளைய தீர்ப்பு திரைபடம் முதல் இன்று வரை இவரது நடிப்பு, பாடல் மற்றும் நடனத்திற்காக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

குறிப்பாக அவரது நடனத்திற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். இன்றளவும் இவரது கட்டுக்கோப்பான உடலமைப்பை பார்த்து இவரது ரசிகர்கள் ஆச்சர்யப்படுகின்றனர். எப்படி இப்பவும் இவ்வளவு இளமையாக இருக்கிறார் என நம்மில் பலர் சிந்திரத்திருப்போம். இத்தனைக்கும் இவர் அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடியவர் அல்ல. இருப்பினும் இந்த வயதிலும் ஃபிட்டாக எப்படி இருக்கிறார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகிறது. அந்த பேட்டியில் நடிகர் விஜய்யின் ஃபிட்னஸ் குறித்து பேசியிருந்தார். அதில் நடிகர் விஜய் காலையில் 2 தோசை, இரவு 2 தோசை மட்டுமே சாப்பிடுவார் என்றும், தொடர்ந்து டயட் மற்றும் லேசான உடற்பயிற்சி செய்வார் என்றும் இதுதான் அவரது ஃபிட்னஸ் ரகசியம் என்றும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் நாள் முழுவதும் சிறிய, லேசான உணவுகளுக்கு முன்னுரிமை அளித்து, உடல் எடையைக் குறைக்காமல், உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெறுவதை உறுதிசெய்கிறார். இதனால், உடல் எடை அதிகரிக்காமல் அவருக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும் மற்றும் எளிதில் ஜீரணமாகும். மேலும் தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் கார்டியோ உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

Read more: பத்திரப்பதிவு செய்ய போறீங்களா..? ரூல்ஸ் மாறுது.. யார் யாருக்கு பொருந்தும்..? – பதிவுத்துறை விளக்கம்

Next Post

மாடலிங் துறையின் "சாக்லேட் கேர்ள்" 26 வயதில் மரணம்..? - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

Sun Jul 13 , 2025
It has been reported that San Rachel, a Tamil girl from Puducherry, has committed suicide.
sanrechal1

You May Like