“விஜய் சரியான நேரத்திற்கு வர வேண்டும்..” தவெக நிர்வாகிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்..!

vijay 1

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ளது.. விரைவில் தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..


ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. இதனிடையே என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் விஜய் அதனை மறுத்திருந்தார்.. மேலும் தவெக தலைமையில் தான் ஆட்சி அமையும் என்றும் மதசார்பற்ற கொள்கையில் சமரசமே கிடையாது என்றும் விஜய் கூறியிருந்தார்.. மகளிர் தினத்தில் தாலிக்கு தங்கம், மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளையும் விஜய் அறிவித்தார்.. விரைவில் தவெகவின் முழு தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை விஜய் பெரம்பூர் தொகுதியில் இருந்து தொடங்குகிறார்.. விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு தலைமை தேர்தல் அதிகாரியிடம் செங்கோட்டையன் மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் நாளை பெரம்பூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. தேர்தலில் அவர் பெரம்பூரில் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில் பெரம்பூரில் இருந்தே தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்..

பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் நாளை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.. அப்போது விஜய் குறிப்பிட்ட நேரத்திற்கு களத்திற்கு வர வேண்டும் என தவெக மாவட்ட செயலாளர்களிடம் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.. அனுமதி கேட்ட நேரத்திலேயே பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்..

RUPA

Next Post

தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமாகா.. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே. வாசன்..! எந்த தொகுதியில் யார் போட்டி..?

Fri Mar 27 , 2026
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும், தமாகாவுக்கு 5 தொகுதிகளும், ஐஜேகேவுக்கு 2 தொகுதிகளும், புரட்சி பாரதம், தமிழக முன்னேற்றக் கழகம் கட்சிகளுக்கு தலா ஒரு […]
GK Vasan Bjp lotus

You May Like