தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதனிடையே தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்தார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடவுள்ளார். தவெக தேர்தல் வாக்குறுதிகளையும் விஜய் அறிவித்தார்.
தொடர்ந்து வேட்பாளர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகினர். இந்த நிலையில் தவெக சார்பில் பூந்தமல்லி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரகாசம் பாலியல் வழக்கில் சிக்கியது தெரிய வந்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்னர் திருவள்ளூரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிகழ்ச்சியில் மகளில் அணி நிர்வாகியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில் பிரகாசம் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நானே பார்த்து. பார்த்து தேர்வு செய்த வேட்பாளர்கள் என்று விஜய் பெருமிதமாக கூறினார். ஆனால் பாலியல் வழக்கில் சிக்கியவை விஜய் வேட்பாளராக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் பல வருடங்களாக விஜய்க்காக உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்வில்லை என போராட்டம் நடத்தி வருகிறார்கள். மறுபுறம் பாலியல் வழக்கில் சிக்கியவருக்கு விஜய் சீட் வழங்கியுள்ளனர் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.



