யாரோ எழுதிக் கொடுப்பதை மட்டுமே விஜய் பேசுகிறார்.. அவரின் அஜெண்டா இதுதான்.. திருமாவளவன் காட்டம்..!

vijay thiruma 1

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் பாவரசு மதுரையில் இயற்கை எய்தினார்.. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றார்.. அப்போது திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..


அப்போது பேசிய அவர் “ அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை 10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி தெரிவித்திருக்கிறார்.. தேர்தல் காலத்து வாக்குறுதிகள் வழக்கமான வாக்குறுதிகள்.. அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம்.. இருந்தாலும் கூட இந்த அறிவிப்பு தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

கல்வி, மருத்துவத்தை தவிர வேறு எதனையும் இலவசமாக வழங்க கூட்டாது என விசிக தொடக்க காலத்தில் இருந்தே கூறி வருகிறது.. இருந்த போதிலும், திமுக மகளிரை மேம்படுத்துவதற்காக, மாணவ செல்வங்களுக்கும் மேம்படுத்துவதற்கு உரிமை தொகையாக வழங்குகிறது.. சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கும் அல்லது காலங்காலமாக வஞ்சிக்கப்பட்ட நிலையில் இருக்கிற அதிகாரம் இல்லாமல் இருக்கிற நிலையில் மேம்படுத்தும் என்ற நிலையில் அந்த திட்டத்தை சிறுத்தைகள் கட்சிகள் வரவேற்றது..

பொருளாதாரத்தை அனைவருக்கும் பரவலாக்கும் வகையில் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது..

யாரோ கூறுவதைம் எழுதிக் கொடுப்பதை மட்டுமே, தமிழக வெற்றிக் கழக தலைவ்ர் விஜய் பேசுகிறார்.. கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை திமுக எதிர்ப்பை மட்டுமே விஜய் பேசுகிறார்.. திமுகவை எதிர்ப்பது ஒன்றே விஜய்யின் அஜெண்டாவாக உள்ளது.. யாருக்காக கட்சி தொடங்கினார்; எதை நோக்கி தவெக தலைவர் விஜய் பயணிக்கிறார் என்று தெரியவில்லை.. தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர்களின் கொள்கை, கோட்பாடுகள் குறித்து அவரின் தொடண்டர்களுக்கு விஜய் விளக்கவில்லை.. ” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “ ஓ. பன்னீர்செல்வம் மிகவும் உறுதியானவர். சகிப்பு தன்மை உள்ளவர்.. சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கும் பக்குவம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு உள்ளது.. அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.. ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஏன் முன்வரவில்லை என்று விளங்கவில்லை.. அவர் திமுகவில் இணைவார் என்று சில யூகங்கள் வருகிறது.. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்தால் வரவேற்பேன்.. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்த சிக்கலும் வராமல் பார்த்துக் கொள்வது எங்களின் பொறுப்பு, கடமை..” என்று தெரிவித்தார்..

Read More : கடைசி நேரத்தில் இபிஎஸ் அழைத்தால் அதிமுகவில் இணைவீர்களா? ஜெயலலிதா பிறந்தநாளில் ஓபிஎஸ் சொன்ன ஷாக் பதில்..!

RUPA

Next Post

1 கி.மீ.க்கு 90 பைசா செலுத்தினால் போதும்… இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி டென்ஷன் இல்லை..!

Tue Feb 24 , 2026
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஹீரோ மோட்டோகார்ப் ஒரு புதிய திட்டத்துடன் பயணிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இப்போது மின்சார ஸ்கூட்டரை வாங்குவது எளிது. சேவையாக உண்மையான பேட்டரி என்ன? அது எப்படி வேலை செய்கிறது? என்று பார்க்கலாம்.. இந்தியாவில் பொது சார்ஜிங் வசதிகள் நகரங்கள் மற்றும் நகரங்களில் ஒரே மாதிரியாக இல்லை. பேட்டரி சந்தா அல்லது பேட்டரி ஒரு சேவையாக (BaaS), இந்த சிக்கலை தீர்க்க ஒரு […]
Hero VIDA Scooters

You May Like