தளபதி விஜய் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது “வாரிசு” படம். முதலில் இந்த படத்திற்கு ஆந்திராவில் திரையங்குகள் கிடைப்பதில்லை என்ற சிக்கல் தோன்றி மறைந்தது, பிறகு தமிழகத்தில் அதே பிரச்சனை பூதாகரமாக வெடித்து தற்போது அதுவும் சரியாகி, 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தே உள்ளது.
இந்த படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வரும் நிலையில், 3 வைத்து பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தமான இசையில் சின்ன குயில் சித்ராவின் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் அம்மா செண்டிமெண்ட்டை கொண்டிருக்கிறது. “ஆராரிராரிரோ கேட்குதம்மா ” என் தொடண்ட்க்கும் இந்த பாடல் மெலடி கலந்து இருப்பதால் பெரிய ஹிட் அடிக்கும் என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெளியாகி ஒன்றரை மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது இந்த பாடல்.