தட்டித்தூக்கிய விஜய்..! அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தவெகவில் இணைந்தார்..!

vijay admk

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. மேலும் தவெக தலைமையையை ஏற்று கூட்டணிக்கு வரும் கட்சிகளை வரவேற்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.. கூட்டணி குறித்து அனைத்து இறுதி முடிவுகளை எடுக்க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.. தவெக சார்பில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கும் சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது..


இதனிடையே அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.. சமீபத்தில் திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பதி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.சி.டி பிரபாகரன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் எல்.கே.எம்.பி. வாசு சென்னையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்தார்.. அப்போது எல்.கே.எம்.பி. வாசு, விஜய்க்கு எம்.ஜி.ஆர் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.. இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக வேலூர் மாவட்ட செயலாளர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்..

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் முனிசபல் காலனியை சேர்ந்தவர் எல்.கே.எம்.பி.வாசு, அதிமுக முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளர். இவர் 1991-ம் ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலாளராகவும், 96-ம் ஆண்டு வேலூர் நகர சபை அதிமுக குழு தலைவராகவும் இருந்தார்.. 2006-ம் ஆண்டு முதல் 2010 வரை வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தார்.. 2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : சீறும் காளைகள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

RUPA

Next Post

அம்பானி வீட்டின் 1 மாத மின்சாரக் கட்டணம் இத்தனை லட்சமா? ஷாக் ஆகாம படிங்க..!

Fri Jan 16 , 2026
உலகின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், நாம் முகேஷ் அம்பானியைப் பற்றிப் பேசும்போது, ​​அவரது வீடான அன்டிலியாவும் விவாதத்திற்கு வருகிறது. ஏனென்றால், அன்டிலியா பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல், அந்த வீட்டில் பல வசதிகளும் உள்ளன. ஆனால், முகேஷ் அம்பானி தான் வசிக்கும் அன்டிலியா வீட்டில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார் என்பதுதான் கேள்வி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக […]
ambani house

You May Like