விஜய் நாவை அடக்கி பேச வேண்டும்.. அதிமுக களத்தில் இல்லாத கட்சியா? கொந்தளித்த செல்லூர் ராஜு..!

Sellur raju vijay

களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என பேசிய விஜய்க்கு அதிமுக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது விஜய்யை காட்டமாக விமர்சித்தார்.. “ வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம்.. இன்று கூட்டணி அமைத்திருக்கும் திமுகவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரே கொள்கையா? இதே திமுக அன்று பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது..


கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் அழைக்கலாம்.. வருவதும் வராததும் அவர்களின் விருப்பம்.. அவர்கள் கூட்டணி வைக்கும் கொள்கையை ஏற்றுக் கொண்டார்களா? முரண்பட்ட கொள்கைகளை கொண்டவர்கள் கடந்த காலங்களில் கூட்டணி அமைத்துள்ளனர்.. எங்கள் தலைவர் இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்து சொல்கிறார்..

அதனால் அதிமுக களத்தில் இல்லை என்று விஜய் பேசுவது முட்டாள்தனத்திலும் முட்டாள் தனமானது.. எங்க எடப்பாடியாருக்கு வரும் கூட்டம் போல் யாருக்கும் வருவதில்லை.. எங்கள் கட்சி களத்தில் இல்லை என்று சொல்வதற்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? விஜய் நாவை அடக்கி பேச வேண்டும்..” என்று தெரிவித்தார்..

சமீபத்தில் ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், களத்தில் இல்லாதவர்களை பற்றி நான் விமர்சிக்க மாட்டேன்.. களத்தில் இருப்பவர்கள் தான் எனது போட்டி..” என்று பேசியிருந்தார்.. இதன் மூலம் களத்தில் இல்லாத கட்சி என அதிமுகவை தான் அவர் குறிப்பிடுகிறார் என்று கூறப்பட்டது.. இந்த சூழலில் விஜய்யின் இந்த பேச்சை அதிமுக கண்டித்துள்ளார்..

Read More : கரூர் பெருந்துயரம்.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆஜர்..!

RUPA

Next Post

வெள்ளியின் ராஜா யார் என்று தெரியுமா? உலகில் அதிக வெள்ளி இருப்புக்களைக் கொண்ட முதல் 5 நாடுகள் இவை தான்..!

Mon Dec 29 , 2025
தங்கத்துடன் சேர்ந்து, வெள்ளியும் 2025-ஆம் ஆண்டில் முதலீட்டு உலகில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. வெள்ளியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை அளித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை இந்த நாட்களில் சுமார் 2.40 லட்சம் ரூபாய் என்ற நிலையை எட்டியுள்ளது என்பதே சந்தையில் உள்ள தேவையைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், இந்த வெள்ளிக்குப் பின்னால் உண்மையான சக்தி எந்த நாட்டுக்கு இருக்கிறது […]
Silver 2025

You May Like