தமிழ்நாட்டில் தனது ரசிகர்களை வைத்து ஜெயித்துவிடலாம் என்று எண்ணக்கூடாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்..
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன.. தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கூற முடியும்.. விசிக தலைவர் தொல். திருமாவளவன் பாதை மாறி சென்றுவிட்டார்.. அவரின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் அவரின் தலைமை பண்பை விமர்சிக்கும் அகையில் உள்ளது.. ஜெயலலிதா மிகப்பெரிய தலைமைப் பண்பு கொண்டவர்.. அவரை பார்த்து நான் மெய் சிலிர்த்து விட்டேன் என்று திருமாவளவன் என்று என்னிடம் பேசியிருந்தார்.. தற்போது அவருக்கு என்ன நெருக்கடி வந்தது என தெரியவில்லை.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறை சொல்லி பேசி வருகிறார்..
அவரை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தி அழகு பார்த்தவர் ஜெயலலிதா.. எனவே திருமாவளவன் தனது தன்மையை மாற்றிக் கொள்ள வேண்டும்.. அவர் அதிமுகவினர் பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும்..
தமிழக வெற்றிக் கழகம் என்பது புதிதாக தொடங்கப்பட்ட கட்சி.. அவர்கள் இப்போது தான் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்துகிறார்கள்.. பனையூரில் இருந்து கொண்டு விஜய் அரசியல் செய்வது விமர்சனத்திற்கு உள்ளாகிறது.. அவர் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும்.. மாநாட்டிலும், செயற்குழுவிலும் பேசியதை வைத்தும் தனது ரசிகர்களை வைத்தும் ஜெயித்துவிடலாம் என்று விஜய் எண்ணக்கூடாது..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கு மேல் வரியில் முறைகேடு செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.. மேயர் என்ற போர்வையில் இருந்து கொண்டு முறைகேடு செய்துள்ளனர்.. அதில் என்ன விவகாரம் என்பது விசாரணையில் தான் தெரியவரும்..” என்று தெரிவித்தார்..
Read More : #Flash : மறைந்த மூத்த தலைவர் இல. கணேசன் உடலுக்கு அரசு சார்பில் நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!