செப். 13. அன்று திருச்சியில் ஆட்டத்தை தொடங்கும் விஜய்..! 23 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி..

7il2srfg actor vijay ani 625x300 28 October 24 1

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.


சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளார். இந்த முறையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.. திமுக, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இதில் ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோர் தவெக உடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.. மறுபுறம் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை..

இதனிடையே தவெக தலைவர் விஜய் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.. அதன்படி, செப்டம்பர் 13-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. ஒரே நாளில் 3 முதல் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. அதன்படி 3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் தமிழகம் முழுவது பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய் மதுரையில் முடிக்கிறார்.. 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு தவெகவினர் காவல்துறையில் மனு அளித்தனர்.. ஆனால் அந்த பகுதியில் பிரச்சாரம் செய்தால் அதிக கூட்ட நெரிசல் ஏற்படும் என்று கூறி காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது..

இதை தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு அளித்தனர்.. மேலும் காவல்துறையினருடன் தவெகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.. அப்போது காவல்துறையின் 23 நிபந்தனைகளை விதித்தனர்.. குறிப்பாக விஜய் வாகனத்தின் பின்னால் அதிக அளவில் வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் பேசும் இடங்களை தவிர மற்ற இடங்களில் விஜய் பிரச்சார வாகனத்தின் வெளியே வரக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது.. இதுபோன்ற 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.. ஆனால் மற்றவர்களை விட அதிக நிபந்தனைகள் வழங்கப்பட்டதாக தவெகவினர் கூறினர்.. மேலும் காவல்துறையினரின் குறிப்பிட்ட நிபந்தனைகளை தவெகவினர் ஏற்க மறுத்துவிட்டனர்..

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மரக்கடை பகுதியில் எம்.ஜி.ஆர் அருக்கே விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.. காவல்துறை விதித்த 23 நிபந்தனைகளையும் பின்பற்றுவதாக தவெக நிர்வாகிகள் எழுத்துப்பூர்வ கடிதம் சமர்பித்த நிலையில் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் தவெகவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

Read More : பாலியல் தொழிலாளி ‘பொருள்’ அல்ல, விபச்சார விடுதிக்கு செல்பவர் ‘கஸ்டமர்’ அல்ல: கேரள உயர் நீதிமன்றம்..

RUPA

Next Post

நவராத்திரியின் போது பணத்தை அள்ளப் போகும் 4 ராசிகள்! துர்கா தேவியின் பூரண அருள் கிடைக்கும்!

Wed Sep 10 , 2025
நவராத்திரி பண்டிகை என்பது சக்தியின் தெய்வமான துர்கா தேவியை வழிபடுவதற்கு ஒரு நல்ல நேரம். இந்த 9 நாட்களும் ஆன்மீக மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜோதிடத்தின் படி, நவராத்திரியின் இந்த புனித நாட்களில் கிரகங்களின் நிலைகளும் மாறுகின்றன, மேலும் சில ராசிக்காரர்களுக்கு துர்கா தேவியின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 2025 நவராத்திரி விழா செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் […]
navrathri zodiac

You May Like