தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக தனது அதிரடி நகர்வுகளால் கவனம் ஈர்த்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வேலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உணர்ச்சிகரமாக பேசியதோடு மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் கண்கலங்கியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. “மக்களும் நானும் ரத்தமும் சதையும் போன்றவர்கள், எங்களைப் பிரிக்க முடியாது” என்று அவர் ஆவேசமாக முழங்கியபோது, பேச முடியாமல் தவித்துக் கண்ணீர் சிந்திய நிகழ்வு அங்கிருந்த தொண்டர்களை நெகிழச் செய்தது. ஆனால், இந்த உருக்கமான தருணம் கூட ஒரு நன்கு திட்டமிடப்பட்ட ‘ஸ்கிரிப்ட்’ (Script) தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விஜய்யின் இந்த அழுகையை விமர்சிக்கும் தரப்பினர், இணையத்தில் ஒரு ரகசியக் குறிப்புத் தாளை ஆதாரமாக வெளியிட்டுச் சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியுள்ளனர். அந்தத் தாளில், விஜய் எப்போது பேச வேண்டும், எங்கு இடைவெளி விட வேண்டும், எந்த இடத்தில் மைக்கை விட்டு விலகிச் சென்று அழ வேண்டும் என்பது வரை மிக துல்லியமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, “இந்த வரியைப் பேசி முடித்ததும் சிறிது நேரம் அமைதியாக இருக்க வேண்டும்; பிறகு பேச முடியாமல் தவிப்பது போலப் பாவனை செய்து, மைக்கை விட்டுச் சற்று தள்ளிப் போய் அழ வேண்டும்; பின்னர் மீண்டும் மேடைக்கு வந்து மன்னிப்பு கோரிவிட்டு உணர்ச்சிகரமாகத் உரையைத் தொடர வேண்டும்” போன்ற ரகசியக் குறிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளதாக அந்தச் செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
திரைத்துறையில் பல ஆண்டுகால அனுபவம் கொண்டவர் என்பதால், விஜய் எப்போதும் வசனங்களை மனப்பாடம் செய்துதான் பேசுவார் என்ற விமர்சனம் அவர் அரசியலுக்கு வந்த நாளிலிருந்தே இருந்து வருகிறது. தற்போது வைரலாகியுள்ள அந்த ‘ஸ்கிரிப்ட்’ பேப்பர், அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போல அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மேடையில் வெளிப்படும் உணர்ச்சிகள் கூட கேமராக்களுக்காக திட்டமிடப்பட்டவையா என்ற கேள்வி, தவெக ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் பெரும் போர் உருவாவதற்கு காரணமாகியுள்ளது.
Read More : அண்ணியுடன் கள்ள உறவு..!! ஊரார் முன்னிலையில் நேர்ந்த அசிங்கம்..!! கணவன் செய்த பயங்கர செயல்..!!



