வீட்டில் இருக்கும் பெண்களுக்கும், பெரியவர்களுக்கும் பொழுதுபோக்கு சாதனமாக டெலிவிஷன் சீரியல்கள் திகழ்கின்றன. ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைக்களங்களுடன் பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற பாக்கியலட்சுமி தொடர் கிட்டத்தட்ட 1500 எபிசோடுகளையும் கடந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பான நிலையில் தற்போது முடிவுக்கு வந்தது. அதேபோல் யுவன் மயில்சாமி நடிந்து வந்த தங்கமகள் தொடரும் நேற்றுடன் (ஆக. 10) நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகும் இரவு 7 மணிக்கு, ஆக. 11( நாளை) முதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் – 2 தொடர் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், ஆக. 11 முதல் இரவு 7.30 மணிமுதல் 8.15 மணிவரை ஒளிபரப்பாகும் என்றும் அய்யனார் துணை தொடர் இரவு 8.15 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அரை மணி நேர எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் அய்யனார் துணை ஆகிய சீரியல்கள் இனி 45 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மகளே என் மருமகளே தொடர் ஆகஸ்ட் 11( நாளை) முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. தனம் தொடர் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், ஆகஸ்ட் 11( நாளை) முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: ஷாக்!. 3ம் உலகப் போர் நடந்தால் இந்த நோய்தான் முதலில் பரவும்!. குணப்படுத்தவே முடியாதாம்!.