தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.. லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் விஜய் பேருரையாற்றினார்.. அப்போது பேசிய அவர், கேப்டன், எனது அண்ணன் விஜயகாந்த் பிறந்த மண் என்று நெகிழ்ச்சியாக பேசினார்.. சினிமாவிலும் சரி, அரசியலிலும் எம்.ஜி.ஆர் தான் எனது ஹீரோ என்று கூறிய விஜய், பாஜக, திமுகவை கடுமையாக விமர்சித்தார்..
சினிமாக்காரன் என்று முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கும் விஜய் பதிலளித்தார்.. மேலும் சினிமாவில் வருவது பல அடுக்குமொழி வசனங்களையும் பேசினார்.. பாஜக தான் கொள்கை எதிரி எனவும், திமுக தான் அரசியல் எதிரி எனவும், பாஜகவின் அடிமைக் கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்றும் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்..
திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்திருப்பதாகவும், பெண்கள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனவும், வரும் 2026 தேர்தலில் மக்கள் விரோத கபட நாடக திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி என்றும் கூறினார்..
மோடி அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதிமுக பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என்றும் அப்பாவி தொண்டர்கள் வேதனையில் தவிக்கின்றனர் என்றும் விஜய் கூறினார்..
மேலும் விஜய் தனது பேச்சில் கமல்ஹாசனையும் மறைமுகமாக விமர்சித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “ மார்கெட் போன பின்னர் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை.. படைக்கலனுடன் அரசியலுக்கு வந்துள்ளேன்..” என்று தெரிவித்தார்..
விஜய்யின் இந்த கருத்து கமல்ஹாசனை மறைமுகமாக விமர்சித்ததாகவே பார்க்கப்படுகிறது.. ஏனெனில் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய காலக்கட்டத்தில் திமுகவை விமர்சித்திருந்தார்.. ஆனால் தற்போது திமுக உடன் கூட்டணி அமைத்து ராஜ்யசபா எம்.பியாகவும் ஆகிவிட்டார்.. மேலும் ஒருமுறை விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல், நடிகர்களுக்கு வரும் கூட்டம் அனைத்தும், ஓட்டாக மாறாது என்று கூறியிருந்தார்.. இதற்கு தான் பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் பேசி உள்ளார்..
இன்றைய மாநாட்டில் பேசிய விஜய் “ இந்த கூட்டம் வெறும் ஓட்டாக மட்டுமல்ல, வரும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வைக்கப்போற வேட்டாக, நம்மை கோட்டைக்கு அனுப்பும் ரூட்டாக இருக்கப்போகிறது என்பதை விரைவில் தெரிந்து கொள்வீர்கள்..” என்று தெரிவித்தார்..
Read More : “நீங்க தேர்ந்தெடுக்கப்போற அந்த தளபதி.. “ மதுரை மாநாட்டில் விஜய் சொன்ன குட்டிக்கதை என்ன தெரியுமா?