விஜய் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டார்.. அவர் ஒரு ஆளே கிடையாது.. நயினார் காட்டம்..!

nainar vijay

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்தும் வருகின்றனர்.. கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய் அவ்வப்போது பாஜகவை விமர்சித்து வருகிறார்.. ஆனால் திமுகவை அட்டாக் செய்யும் அளவுக்கு விஜய் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதில்லை..


இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ விஜய் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டார், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? அது தான் விஜய்க்கான பதில். விஜய் ஒரு ஆளே கிடையாது, நான் அவரைப்பற்றி பேசவே போவதில்லை.” என்று தெரிவித்தார்..

இதையடுத்து நயினார் விமர்சனத்திற்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.. தவெகவின் நிர்மல் குமார் இதுகுறித்து பேசிய போது “ ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு நயினார் பொது வெளியில் நாகரீகம் இல்லாமல் பேசுகிறார்.. தொழிலதிபர் நயினார் நாகேந்திரன் அரசியல்வாதியாக முயற்சித்து கொண்டிருக்கும் நபராகவே இருப்பார்..” என்று தெரிவித்தார்..

Read More : பேட்டி எடுக்க கூடாது.. செய்தியாளர் மீது கொடூர தாக்குதல்.. தவெகவினர் அராஜகம்.! சேலத்தில் பெரும் பரபரப்பு..!

RUPA

Next Post

" எல்லாமே Copy Paste.. நீங்க ஒரிஜினலா..? ஓரமா போய் விளையாடுங்க Uncle.." விஜய்யை லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்த அதிமுக..!

Fri Feb 13 , 2026
சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் எப்போதும் போல திமுகவை கடுமையாக சாடினார்.. மேலும் அதிமுகவையும் சேர்த்து விமர்சித்தார்.. செல்ஃபே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு எல்லாம் வேலைக்கே ஆகாது.. இதை ஆணித்தனமாக அடித்து சொல்கிறேன்.. தேர்தலுக்கு பணத்தை கொட்டுவார்கள்.. பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.. அதை வாங்கிக் கொண்டு அவர்களின் காதில் விசிலை ஊதி அனுப்புங்க.. அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி […]
1332588

You May Like