தமிழ் சினிமாவின் கேப்டன் விஜயகாந்த் என்றாலே உதவித்தன்மை, தைரியம், மனிதநேயம் ஆகியவை நினைவுக்கு வரும். திரைத்துறையிலோ, அரசியலிலோ, அல்லது சாதாரண மக்களிடையிலோ யாருக்காவது உதவி செய்ய வேண்டுமென்றால் உடனே முன்வந்தவர் அவர்.
மதுரையிலிருந்து திரைத்துறைக்குள் நுழைந்த விஜயகாந்த், தன் கடின உழைப்பால் தனக்கென தனி அடையாளம் பெற்றவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் உச்சத்தில் இருந்த காலத்திலும், தனது திறமையால் ஒரு தனி இடத்தை பிடித்தார். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.
திரைத்துறையில் உயர்ந்த நிலையிலும், பிற நடிகர்களுக்கு உதவி செய்ததில் விஜயகாந்த் எப்போதும் முன்னணியில் இருந்தார். பீக்கில் இருந்தபோது கூட, விஜய் மற்றும் சூர்யா போன்ற இளம் நடிகர்களின் படங்களில் கெஸ்ட் ரோலாக நடித்தார். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது பலரின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்.
அதேபோல், நடிகர் வடிவேலுவுடன் ஏற்பட்ட ஒரு சம்பவம், விஜயகாந்தின் மனிதநேயம் எவ்வளவு ஆழமானது என்பதை மீண்டும் நிரூபித்தது. ‘சின்னக்கவுண்டர்’ படத்தில் வடிவேலுவை நடிக்கவிடக் கூடாது என கவுண்டமணி எதிர்த்தபோது, அவரை சமாதானப்படுத்தி வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்தது விஜயகாந்த்தே. ஆனால் பின்னர் ஒரு தவறான புரிதலால் வடிவேலு விஜயகாந்தை எதிர்த்தாராம். இதற்கு விஜயகாந்த் எந்தவித ரியாக்ஷனும் காட்டவில்லை.
மாறாக, ஒரு சமயத்தில் வடிவேலு, காமெடி நடிகர் ஜெயமணியை ஃபோனில் மிரட்டியதாகச் சொல்கிறார்கள். இதை கேட்ட விஜயகாந்த், வடிவேலுவிடம் நேராகக் கூறியதோடு மட்டும் இல்லாமல், ஜெயமணியின் மனைவியிடம் நேரடியாக அழைத்து, “வடிவேலு தவறாகப் பேசியிருக்கக் கூடாது. அவருக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தை ஜெயமணி தாமே ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
Read more: விடிஞ்சா திருமணம்.. குளியலறையில் மணப்பெண் மர்ம மரணம்.. மாப்பிள்ளை வீட்டில் நடந்த பகீர் சம்பவம்..!!



