மதுரையிலிருந்து திரைத்துறைக்குள் நுழைந்த விஜயகாந்த், தன் கடின உழைப்பால் தனக்கென தனி அடையாளம் பெற்றவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் உச்சத்தில் இருந்த காலத்திலும், தனது திறமையால் ஒரு தனி இடத்தை பிடித்தார். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.
திரைத்துறையில் உயர்ந்த நிலையிலும், பிற நடிகர்களுக்கு உதவி செய்ததில் விஜயகாந்த் எப்போதும் முன்னணியில் இருந்தார். பீக்கில் இருந்தபோது கூட, விஜய் மற்றும் சூர்யா போன்ற இளம் நடிகர்களின் படங்களில் கெஸ்ட் ரோலாக நடித்தார். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது பலரின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். தமிழ் சினிமாவின் கேப்டன் விஜயகாந்த் என்றாலே உதவித்தன்மை, தைரியம், மனிதநேயம் ஆகியவை நினைவுக்கு வரும்.
அந்த வகையில் சினிமாவிலும் அரசியலிலும் அவரது பங்கு என்றும் மறக்க முடியாதது. இந்த சூழலில் விஜயகாந்த் குறித்து நடிகை ஊர்வசி ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், “விஜயகாந்த்துடன் நடிக்க நான் கமிட்டானபோது, ஐயோ இந்த நான் தங்கச்சினுதான் கூப்பிடுவேன்.. என்னால் அவங்க கூட ஜோடியா நடிக்க முடியாது என்று கூறினார்.
இருந்தாலும் இருவரும் சேர்ந்து நடித்தோம். காதல் காட்சிகள் வரும்போதெல்லாம் மேம்போக்காக நடித்துவிடுவார். அதேபோல் இந்தப் பொண்ணு அநியாயத்துக்கு வெள்ளையா இருக்கே நான் கேமராவில் எப்படி தெரிவேனோ என்றும் கிண்டலாக பேசுவார். முக்கியமாக அவர் சாப்பாடு போடும் விதம் அவ்வளவு அருமையாக இருக்கும். அவருடைய ஷூட்டிங்காக இருந்தாலும் மற்ற ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்தாலும் சரி அவருடைய தலைமையில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள்” என்றார்.
Read more: பிரதமர் மோடி பிகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச தைரியம் இருக்கா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..



