கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணங்களை ஒத்திவைத்தார்..
கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஒரு மாதமாக விஜய் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்த நிலையில் அவரின் கட்சியின் மற்ற தலைவர்களும் தலைமறைவாகினர்.. தற்போது அவரின் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்துள்ளனர்.. மேலும் கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்தார்.. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்க்காமல், அவரை பார்க்க வரவழைப்பது என்ன மாதிரியான அரசியல் என்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறிய பின்பு தான் தவெக மீண்டும் செயல்பட தொடங்கியது ..தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாட பணிகள், செயல்பாடுகளை புதிதாக நிர்வாக குழு நியமனம், சிறப்புப் பொதுக்குழு கூட்டம், மீண்டும் திமுக அரசை கண்டித்து கண்டன அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்.. மேலும் சமீபத்தில் SIR பணிகள் குறித்தும் வீடியோ ஒன்றை விஜய் வெளியிட்டார்.
இந்த நிலையில் விஜய் தனது பிரச்சார பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.. அதன்படி, டிசம்பர் 4-ம் தேதி சேலத்தில் விஜய் பிரச்சாரம் நடத்த அனுமதி கோரி காவல் ஆணையரிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது.. எனினும், சேலத்தில் வேறு தேதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது..
டிசம்பர் 3-ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் என்பதால் சேலம் சரக காவல்துறையினர் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு 4-ம் தேதி வருவார்கள்.. மேலும் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை ஒட்டி பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.. எனவே காவல்துறையினரால் டிசம்பர் 4-ம் தேதி போலீசார் பாதுகாப்பு தருவதில் சிக்கல் ஏற்படலாம் என்று வேறு தேதியில் விஜய் பிரச்சாரம் செய்யுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்..
Read More : இன்றும் நாளையும் கனமழை பொளந்து கட்டும்.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் வார்னிங்!



