“விஜய்யின் அப்பாவுக்கே தவெகவில் மரியாதை இல்ல..” திமுகவில் இணைந்த பின் பி.டி. செல்வகுமார் ஆவேசம்..!

PT selvakumar

தவெக தலைவர் விஜய் உடன் 25 ஆண்டுகாலம் பயணித்த பி.டி. செல்வக் குமார் திமுகவில் இணைந்தார்.. இவர் 2003-ம் ஆண்டு முதல் விஜய்க்கு மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தவர்.. விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தை பி.டி. செல்வக்குமார் தான் தயாரித்திருந்தார்.. இவர் கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருந்து வருகிறார்..


பிடி. செல்வகுமார் தலைமையிலான நூற்றுக்கணக்கானோர் இன்று திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடந்தது.. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் பிடி. செல்வக்குமார் திமுகவில் இணைந்தார்..

இந்த நிலையில் திமுகவில் இணைந்தது ஏன் என்பது குறித்து பி.டி.செல்வக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது “ தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மிக சிறப்பாக தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.. திமுகவின் கட்டமைப்பு என்னை ஈர்த்தமையால், இன்னும் சிறப்பாக மக்கள் பணியாற்றிட திமுகவில் இணைந்துள்ளேன்.. எங்களின் கலப்பை மக்கள் இயக்கம் திமுகவுடன் இணைந்துள்ளது..

விஜய் மக்கள் இயக்கத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து நான் பணியாற்றினேன்.. புதிதாக வருபவர்களால் எங்களை போன்றவர்கள் அங்கு பயணம் செய்ய முடியாத நிலை இருக்கிறது.. சந்திரசேகர் விஜய்க்காக அவ்வளவு உழைத்துள்ளார்.. அவருக்கே அங்கு மரியாதை இல்லை.. விஜய்யின் அப்பா சந்திரசேகரையே அவர்கள் பிரித்து வைத்துள்ளார்.. விஜய்யை சுற்றி தீயக்கூட்டம் ஒன்று உள்ளது..

எனது ரசிகர் மன்றங்களுக்காக உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று விஜய் கூறினார்.. ஆனால் விஜய்க்கு ஆரம்ப காலத்தில் உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் அங்கு முக்கியத்துவம் இல்லை.. தவெகவில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் யாரும் ரசிகர்கள் இல்லை.. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தவெகவில் முக்கியத்துவம் இல்லை..

ஆரம்ப காலத்தில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை.. இதனால் எனக்கு மன வேதனை இருக்கிறது.. எனது பயணத்திற்கு தவெக சரியான இடம் இல்லை.. வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது.. மக்களுக்காக களமிறங்கி வேலை பார்க்க வேண்டும்.. மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசாலம் முதல்வரை மட்டுமே குறை சொல்கின்றனர்.. மக்கள் பிரச்சனையை பேசுங்கள்..” என்று தெரிவித்தார்..

Read More : Flash : தட்டி தூக்கிய ஸ்டாலின்..! விஜய்க்கு நெருக்காமனவர் திமுகவில் இணைந்தார்.. காலியாகும் தவெக கூடாரம்?

RUPA

Next Post

அவல நிலையில் அரசுப் பள்ளிகள்.. ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா? CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

Thu Dec 11 , 2025
ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், […]
67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

You May Like