விஜய் வாழ்க்கை இப்படி மாற சில சனியன், சகடைகள் தான் காரணம்..!! மனைவியை மதிக்க தெரியாதவர்..!! முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பரபரப்பு பேட்டி..!!

Vijay 2026 3

தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் நடிகர் விஜய்யின் குடும்ப விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், அவரது முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் வெளியிட்டுள்ள அதிரடி விமர்சனங்கள் விவாதத்தை இன்னும் சூடாக்கியுள்ளன. விஜய்யின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் செல்வகுமார், தற்போது விஜய்க்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பியுள்ளன.


விஜய்யின் தற்போதைய நிலைக்கு அவர் அண்மைக்காலமாக சேர்த்துக்கொண்ட சில நபர்களே காரணம் என சாடியுள்ள செல்வகுமார், “குறிப்பிட்ட சனியன், சகடைகள் இணைந்த பிறகே விஜய்யின் வாழ்க்கையில் இத்தகைய சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார். மேலும், திரையில் மட்டும் பெண்களுக்கு ஆதரவாகவும், நீதிக்காகவும் போராடுவது போதாது என்றும், நிஜ வாழ்க்கையில் தனது மனைவிக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் இதுவரை யாருக்கும் உண்மையாக இருந்ததில்லை என்ற பகீர் குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். “தன்னைப் பெற்ற தாய், தந்தை முதல் தன்னை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் தனக்கு ஆதரவாக இருக்கும் மக்கள் என எவருக்கும் விஜய் விசுவாசமாக இருந்ததில்லை” என்று செல்வகுமார் விமர்சித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி விஜய் அரசியல் களம் புகுந்துள்ள வேளையில், அவருக்கு மிக நெருக்கமாக இருந்த ஒருவரே இவ்வளவு கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது தவெக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : “சொத்து வாங்குபவர்களுக்கு புதிய சலுகை”..!! அடியோடு மாறும் ரியல் எஸ்டேட் விதிமுறைகள்..!! எப்போது அமல்..?

CHELLA

Next Post

கோடை வெயில்..!! ரத்த தானம் செய்யப் போறீங்களா..? அப்படினா மறக்காமல் இதை பண்ணுங்க..!! தவறினால் ஆபத்து தான்..!!

Sat Feb 28 , 2026
கோடைக்காலத்தின் கடும் வெப்பம் காரணமாக ரத்த வங்கிகளில் ரத்தத்தின் கையிருப்பு குறைய வாய்ப்புள்ள நிலையில், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய முன்வருவது வரவேற்கத்தக்கது. எனினும், கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ரத்த தானம் செய்பவர்கள் சில அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ரத்த தானம் செய்வதற்கு முன்பாகவும், செய்த பின்னரும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். எனவே, […]
Blood Donate 2025

You May Like