“தேர்தலில் தோல்வி அடைந்தால் வெளிநாடு தப்பியோட விஜய் திட்டம்”..? புயலை கிளப்பிய மேலாளர் செல்வகுமார்..!!

tvk vijay n

நடிகர் விஜய்க்கு,நீண்ட கால நிழலாக இருந்த முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் தற்போது ஒரு பெரும் புயலை கிளப்பியுள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியப் பங்கு வகித்தவர், தற்போது திமுகவில் இணைந்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் ஆளுமை குறித்து முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைவரையும் அதிர வைத்துள்ளன.


இதுகுறித்து பேசிய செல்வகுமார், “விஜய் ஒருபோதும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் அல்ல. திரைத்துறையில் ஒரு படம் தோல்வியடைந்தால், அந்தத் தயாரிப்பாளரை சந்திக்கக்கூட விஜய் முன்வரமாட்டார். தோல்வியடைந்தவர்களை தனது பாதையிலிருந்து அடியோடு நீக்கிவிடுவார் என்று தெரிவித்தார். விஜய்க்கு தோல்வி என்பது கசப்பான ஒன்று என்பதால், இக்கட்டான சூழலில் அவர் யாருக்காகவும் தோள் கொடுக்க மாட்டார் என செல்வகுமார் கூறியுள்ளார்.

மேலும், கட்சிப் பணிகளுக்காக சொந்தப் பணத்தைச் செலவிடும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அவர், தேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லாவிட்டால் விஜய் தனது அரசியல் பொறுப்புகளை உதறிவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார் என கூறியுள்ளார். பகிர்ந்துள்ளார். “அரசியல் என்பது நீண்ட காலப் போராட்டம், ஆனால் பின்னடைவு ஏற்பட்டால் விஜய் மக்களை விட்டு விலகிவிடுவார். அவரிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.

Read More : 250 பேர்.. ரூ.55 லட்சம்..!! மொத்தமும் போச்சு..!! சொந்த கடனை அடைக்க மக்கள் பணத்தை சுருட்டிய கில்லாடி தம்பதி..!!

CHELLA

Next Post

“உங்கள் ஆண்ட்ராய்டு போனுக்கு ஆபத்து”..!! “இனி அப்டேட் கொடுக்க முடியாது”..!! கூகுள் நிறுவனம் அதிரடி..!!

Thu Feb 12 , 2026
டிஜிட்டல் யுகத்தின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள், இன்று ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் குடும்பத்திற்கு ஒன்று என்பதே பெரிய விஷயமாக இருந்த நிலை மாறி, இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கையில் ஒரு ஸ்மார்ட்போனுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. சர்வதேச சந்தையைப் போலவே இந்திய மொபைல் சந்தையிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் (iOS) மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு […]
mobile phones e1761024674749

You May Like