சினிமாவில் இருந்து காணாமல்போன விஜய்யின் ரீல் தங்கை..!! இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா..?

தமிழில் ஆட்டோகிராப், திருப்பாச்சி போன்ற படங்களின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை மல்லிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார். ஆனால், இவரின் உண்மையான பெயர் ரீஜா ஜோன்சன். இவர், கேரளாவை சேர்ந்தவர். இவரின் முதல் திரைப்படமும் கேரளத் திரைப்படம் தான். அதன் மூலமாகத் தான் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 2002-ஆம் ஆண்டு ‘நிலுக்குது’ என்ற மலையாளத் திரைப்படம் மூலமாக ஒரு ஹீரோயினாக அறிமுகமானார்.


இதன் பின்னர் தான் தமிழில் ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அத்தோடு ‘மகாநடிகன்’ திரைப்படத்திலும் சிறிய கரெக்டரில் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவருக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் 2005-ஆம் ஆண்டு வெளியான ‘திருப்பாச்சி’ திரைப்படம். இதில் விஜய்க்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு பல படங்களிலும் தங்கச்சியாகவோ அல்லது துணை நடிகையாகவோ நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன. அந்தவகையில் ‘குண்டக்க மண்டக்க, திருப்பதி, உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்’ போன்ற பல படங்களைக் குறிப்பிட முடியும்.

இருப்பினும் இவர் அதிகளவில் மலையாளப் படங்களில் தான் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது ‘அஞ்சலி, திருவிளையாடல்’ என்ற சீரியலிலும் நடித்திருக்கின்றார். இந்நிலையில், தற்போது நடிகை மல்லிகா அவர்கள் திருமணமாகி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இதனால் சினிமாத்துறையை விட்டு காணாமலே போய் விட்டார். இருப்பினும் தனது குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக முன்னெடுத்து வருகின்றார்.

CHELLA

Next Post

டூ பீஸ் உடையில் படு கிளாமர்..!! எத பாக்குறதுனே தெரியலையே..!! வைரலாகும் தர்ஷாவின் கவர்ச்சி வீடியோ..!!

Mon Jul 10 , 2023
தமிழ் சின்னத்திரையில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் இவர் வில்லியாக நடித்த செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தார். வெள்ளித்திரையில் மோகன்.ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். விஜய் டிவியில் […]
டூ பீஸ் உடையில் படு கிளாமர்..!! எத பாக்குறதுனே தெரியலையே..!! வைரலாகும் தர்ஷாவின் கவர்ச்சி வீடியோ..!!

You May Like