தமிழகத்தில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி உள்ளது.. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இவை தவிர, பாமக, தேமுதிக, அமமுக ஆகியவை இன்னும் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்கவில்லை.. எனினும் அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக இணைந்தால் தேர்தல் களம் மாறக்கூடும். இந்த நிலையில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் கள நிலவரம் என்ன? அங்கு யார் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது? திமுக மீண்டும் வெற்றிப் பெறுமா? இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..
மகாகவி பாரதியார் பிறந்த எட்டயபுரம் மண் இந்த தொகுதியில் தான் உள்ளது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் வாழ்ந்த பூமி விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியாகும். விளாத்திகுளம், புதூர் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் ஆகிய பேரூராட்சிகள் உள்ளடக்கிய தொகுதியாகும். மானாவாரி, வைப்பாற்று பாசனம், கிணற்று பாசனம், கடற்கரை ஆகியவை தொகுதியில் உள்ளன.
வானம் பார்த்த பூமியாக மழை பெய்தால் தான் விவசாயம் என்ற நிலையில் இத்தொகுதி விவசாயிகள் உள்ளனர். மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வரும் வைப்பாறு இந்த தொகுதி வழியாக செல்கிறது. மேலும், நெசவுத் தொழில், கரிமூட்டம் தொழில் என பன்முகத்தன்மையுடன் தொகுதி பரந்து விரிந்து கிடக்கிறது. வேம்பார் முதல் தருவைகுளம் வரை 30 கி.மீ. தொலைவுக்கு கடற்கரை, மீன்பிடி மற்றும் உப்பள தொழில்கள் நடைபெறுகின்றன.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,05,405 பேர், பெண்கள் 1,09,597 பேர், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் என மொத்த வாக்காளர்கள் 2,15,022 பேர் உள்ளனர். மொத்தம் 260 வாக்குச்சாவடிகள் உள்ளன. தொகுதியில் ரெட்டியார், நாயுடு, பட்டியல் சமூகங்களின், நாடார், முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகளவில் உள்ளனர்.
இந்த தொகுதி 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை 14 பொது தேர்தல்கள் மற்றும் ஒரு இடைத்தேர்தல் என மொத்தம் 15 தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. இதில் 9 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது, 5 முறையும் திமுக வெற்றி பெற்றுள்ளது, மேலும் காங்கிரஸ் ஒரு முறையும் வென்றுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.சின்னப்பன் 28,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஜி.வி.மார்கண்டேயன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு 27,456 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தன்னுடைய சமூகத்திற்குள் வலுவான செல்வாக்கைக் கொண்டவர். அவர் 2011 முதல் 2016 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தலில், அ.தி.மு.க. அவருக்கு கட்சிச் சீட்டு வழங்காததால், கட்சியின் பேச்சாளராக இருந்த பதவியிலிருந்து ராஜினாமா செய்து, சுயேட்சையாக போட்டியிட்டு 27,456 வாக்குகள் பெற்றார். பின்னர், திமுகவில் இணைந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் 38,549 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அடுத்தபடியாக, திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C. ஜெயக்குமார். ஆரம்பத்தில், விளாத்திகுளம் ஒன்றியச் செயலாளராகப் பதவி வகித்துள்ளார். தொகுதியில் கணிசமான ரெட்டியார் சமூகத்தில் அவர் வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளார். இவரின் முன்னோர்கள் பெரும் விவசாயம் உள்ளிட்ட முக்கியத் தொழில்துறையில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர், பெருமளவு நிலத்தை வைத்து விவசாயம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, போராட்ட அறிவிப்பின்பேரில் பல போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றுள்ளார். எந்தவொரு குற்ற பின்னணியும் இல்லாத காரணத்தால், திமுக சார்பில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றார். தற்போது, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. நாயுடு மற்றும் ரெட்டியார் சமூகங்களில் அவருக்கு நல்ல பெயருண்டு. அவர் தனது பதவிக் காலத்தில் அரியநாயகபுரம், அருங்குளம், பூத்தலபுரம் மற்றும் சினூர் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், உள்ளூர் கட்டுமான மற்றும் அடித்தள கட்டமைப்பின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்துள்ளார்.

2016-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.உமா மகேஸ்வரி 18,718 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு கட்சி இரண்டாக பிரிந்த போது, விளாத்திகுளத்தில் வெற்றி பெற்ற உமா மகேஸ்வரி அமமுகவுக்கு சென்றார். அமமுக தெற்கு மண்டல செயலாளர் மாணிக்கராஜாவுடன் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆ.மு.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது.

2016-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட கே. உமா மகேஸ்வரி 18,718 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி இரண்டாக பிரிந்த போது, விளாத்திகுளத்தில் வெற்றி பெற்ற உமா மகேஸ்வரி அமமுகவில் சேர்ந்தார். அவர் அமமுக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது.
தாருவைகுளம் முதல் வம்பார் வரை 50க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களுக்கு தனிப்பட்ட குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். விளாத்திகுளம் அரசு மருத்துவமனை 24 மணி நேர மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட வேண்டும். வெம்பார் கடற்கரை சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற பல கோரிக்கைகள் உள்ளது.
Read More : அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ.. நவ.6 ல் அனைத்துக் கட்சி கூட்டம்..! தமிழக அரசு அறிவிப்பு..!



