இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் “ கிராம கோயில் பூசாரிகள் மாநாட்டில்” கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.. மேலும் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. அப்போது பூசாரிகலின் நலனுக்காக 11 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்..
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும்.
பூசாரிகள் மரணமடைந்தால் வழங்கப்படும் வாரிசுதாரர் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
கிராம கோவில் பூசாரிகளுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படும்.
இயற்கை எய்தும் கிராம பூசாரிகளின் ஈம சடங்கிற்கான தொகை ரூ.10,000 ஆக உயர்த்தப்படும்.ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
பூசாரி, பூசாரி மகன் மற்றும் மகளுக்கு வழங்கப்படும் திருமணத்திற்கான நிதியுதவி மேலும் ரூ.1000 உயர்த்தப்படும்.
பூசாரி மகன், மகளுக்கு வழங்கப்படும் கல்வி நிதி மேலும் ரூ.1000 உயர்த்தப்படும்
பூசாரிகளும் மகன் மகளுக்கு தற்போது ஒவ்வொரு கல்வியாண்டும் வழங்கப்படும் இடைநிலை, முதுநிலை படிக்கும் நிதியுதவி ஆண்டுக்கு மேலும் ரூ.2000 உயர்த்தப்படும்
பூசாரி மகன் மகளுக்கு தொழில்பயிற்சி நிலையத்தில் பயில ஆண்டுக்கு மேலும் 1000 உயர்த்தி வழங்கப்படும்
உறுப்பினர்களுக்கு மூக்குக் கண்ணாடி வாங்க வழங்கப்படும் 500 நிதி ரூ.1000ஆக உயர்த்தப்படும்..



