கேம் உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய Call of Duty வீடியோ கேம் தொடரின் இணை உருவாக்குநரான வின்ஸ் சாம்பெல்லா (Vince Zampella) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார்.. இந்த தகவலை Electronic Arts (EA) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் தொலைக்காட்சி சேனல் NBC4 வெளியிட்ட தகவலின்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அழகிய சாலையில், வின்ஸ் சாம்பெல்லா தனது ஃபெராரி காரை ஓட்டிச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.
காரணம் தெரியாமல் கார் சாலையிலிருந்து விலகி, கான்கிரீட் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் உடனடியாக தீப்பற்றி முழுமையாக எரிந்தது..
இந்த விபத்தில் காரை ஓட்டியவரும், காரிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட ஒரு பயணியும் காயங்களால் உயிரிழந்தனர். அதிகாரிகள் அறிக்கையில் பெயர்களை நேரடியாக குறிப்பிடவில்லை.
வின்ஸ் சாம்பெல்லாவின் கேம் உலகப் பயணம்
வின்ஸ் சாம்பெல்லா, நவீன வீடியோ கேம் உலகின் மிகச் செல்வாக்கு கொண்ட நபர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 2002 ஆம் ஆண்டு Infinity Ward என்ற கேம் நிறுவனத்தை இணை நிறுவினார்.. 2003 இல் Call of Duty என்ற கேம் தொடரை தொடங்கினார்.. இந்த தொடர் பின்னர் உலகின் அதிகம் விற்பனையான வீடியோ கேம் தொடர்களில் ஒன்றாக மாறியது.. பின்னர் Infinity Ward நிறுவனம் Activision நிறுவனம் மூலம் வாங்கப்பட்டது
Activision-ஐ விட்டு வெளியேறிய பின், 2010 இல் Respawn Entertainment என்ற புதிய நிறுவனத்தை தொடங்கினார்.. இந்த நிறுவனம் மூலம் Titanfall, Apex Legends, Star Wars Jedi போன்ற பிரபல கேம்கள் உருவாக்கப்பட்டன.. 2017 இல் Respawn Entertainment-ஐ Electronic Arts (EA) வாங்கியது
EA-வில் பணியாற்றிய காலத்தில், Battlefield கேம் தொடரை மீண்டும் உயிர்ப்பிக்கும் பொறுப்பை அவர் ஏற்றார்.. இதன் மூலம் FP) வகை கேம்களில் அவரது தலைசிறந்த பங்களிப்பு மேலும் உறுதியாகியது
எலட்க்ரானிக் ஆர்ட்ஸ் (Electronic Arts) வெளியிட்ட அறிக்கையில்: “இது எங்களுக்கே நம்ப முடியாத பெரிய இழப்பு. வின்ஸின் குடும்பத்தினருக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். வீடியோ கேம் உலகில் அவரது தாக்கம் மிக ஆழமானதும், பரவலானதும்.”
ரீஸ்பான் எண்டர்டெயின்மெண்ட் பாட்டீல்ஃபீல்டு (Respawn Entertainment, Battlefield ) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் “ தினமும் தனது குழுக்களை நம்பி, துணிச்சலான யோசனைகளை ஊக்குவித்தவர். டெவலப்பர்கள் மற்றும் வீரர்களுக்காக சரியானது என்று அவர் நம்பிய விஷயங்களுக்காக உறுதியாக நின்றவர்.. Battlefield மற்றும் அதை உருவாக்கும் மக்கள்மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்..” என்று புகழாரம் சூட்டியது.
வின்ஸ் சாம்பெல்லாவின் மறைவு, உலகளாவிய வீடியோ கேம் துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். அவர் உருவாக்கிய கேம்கள் மற்றும் அவர் ஊக்குவித்த சிந்தனைகள், எதிர்கால கேம் உலகில் நீண்ட காலம் தாக்கம் செலுத்தும் என்று கூறப்படுகிறது..
Read More : 60,000 மாணவர்கள்..! உலகின் மிகப்பெரிய பள்ளி இந்தியாவில் தான் உள்ளது! வியக்க வைக்கும் தகவல்..!



