ராகிங் விதிமுறை மீறல்!. ஐஐஎம் திருச்சி உட்பட நாடுமுழுவதும் 89 கல்வி நிறுவனங்கள் மீது வழக்கு!. UGC அதிரடி!

UGC case 11zon

நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவற்றில் ஐஐடி பம்பாய், ஐஐடி கரக்பூர், ஐஐடி ஹைதராபாத், ஐஐடி பாலக்காடு, ஐஐஎம் பெங்களூர், ஐஐஎம் ரோஹ்தக், தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி ஐஐஎம், ரேபரேலி எய்ம்ஸ், என்ஐடிகள், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், இந்திய புள்ளியியல் நிறுவனம் கொல்கத்தா, ஆர்ஜிஐபிடி பாசார் ஆகிய 5 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன.


ஜூன் 9 தேதியிட்ட, UGC செயலாளர் பேராசிரியர் மணீஷ் ஆர் ஜோஷி கையொப்பமிட்ட அறிவிப்பில், யுஜிசி பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படாதது கவனத்துக்கு வந்துள்ளன. யுஜிசியின் ராகிங் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது கட்டாயமாகும். இதை செய்ய தவறுவது விதிமீறல் என்பதையும் தாண்டி மாணவர் பாதுகாப்பை சமரசம் செய்வதாக அமைந்துவிடும்.

இதையடுத்து இந்த கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள் கல்லூரிகள் தங்கள் வளாகத்துக்குள்’ ராகிங் செய்வதை தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை வழங்க வேண்டும். இதை மீறினால் யுஜிசி நிதியுதவியை திரும்பப் பெறுதல், அங்கீகாரத்தை ரத்து செய்தல் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்வதில் யுஜிசி உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளது.

Readmore: சென்னை புல்ஸ் அணி சாதனை!. முதன்முறையாக ரக்பி பிரீமியர் லீக் பட்டத்தை வென்று அசத்தல்!. டெல்லியை வீழ்த்தி அபாரம்!

KOKILA

Next Post

மாணவர்களின் வருகை பதிவேட்டில், ஜாதி விபரங்கள் இருக்கக்கூடாது..!! - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை

Mon Jun 30 , 2025
பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள் அணிவதை தடை செய்தும், மாணவர்களின் வருகை பதிவேடில், அவர்களின் ஜாதி தொடர்பான விபரங்கள் இருக்கக்கூடாது  எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு: * அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும், சமூக பிரச்னைகள், ஜாதி பாகுபாடு, பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள், ராகிங் குறித்து தங்களுக்குள் கலந்தாலோசித்து, பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்க […]
Anbil 2025

You May Like