Viral Video..!! லியோ படத்தின் புதிய வீடியோ வெளியீடு..!! மிரண்டுபோன ரசிகர்கள்..!!

விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதுதவிர பிக்பாஸ் பிரபலங்களான ஜனனி, அபிராமி வெங்கடாசலம், சாண்டி மாஸ்டர் மற்றும் மலையாள நடிகை பிரியா ஆனந்த், நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


இந்நிலையில், லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், அங்கிருந்து அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், தற்போது அப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டு முக்கிய அப்டேட் ஒன்றையும் கொடுத்துள்ளார் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. அதன்படி லியோ படத்தின் பயன்படுத்தப்பட்டு வரும் அதிநவீன கேமரா குறித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். V RAPTOR XL என்கிற அதிநவீன கேமரா தான் லியோ படத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதைவைத்து லியோ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் பணியாற்றியபோது மோகோபாட் என்கிற கேமராவை பயன்படுத்தி அசத்தி இருந்தார். அந்த கேமரா பின்னர் கமலின் விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயனின் மாவீரன் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

Viral Video..!! மீண்டும் தனது குழந்தைகளை பாதுகாத்த சூர்யா..!! பார்ப்போரை நெகிழ வைக்கும் சம்பவம்..!!

Mon Mar 6 , 2023
நடிகர் சூர்யா அண்மையில் தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் குடியேறினார். இந்நிலையில், தற்போது மும்பையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு தனது குடும்பத்தினருடன் சூர்யா வந்திருந்த போது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது வீடியோ எடுத்தவர்களிடம், தான் குழந்தைகளுடன் வந்திருப்பதாகவும், தயவு செய்து வீடியோ எடுக்காதீர்கள் என அன்பாக வந்து வேண்டுகோள் விடுத்து சென்றுள்ளார். நடிகர் சூர்யா தனது குழந்தைகளை மீடியா வெளிச்சத்திற்கு கொண்டுவருவதை […]
WhatsApp Image 2023 03 06 at 10.08.27 AM

You May Like